விருதுநகரில் உள்ள ஒரு திரையரங்கில் பீஸ்ட் படத்தின் ரசிகர்கள் காட்சியை சொற்ப அளவிலான ரசிகர்கள் மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.
நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
KGF 2 Review: இந்திய உணர்வில் ஒரு சர்வதேச படம்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியானது. அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியைக் காண திரையரங்குகளில் திரண்டனர் ரசிகர்கள். படம் முடிந்ததும் விஜய்யின் தீவிர ரசிகர்களே பீஸ்ட் திரைப்படம் தங்களுக்கு ஏமாற்றத்தை தந்ததாக தெரிவித்தனர். இதனால் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
சென்னையில் ஊழியர்களுக்கு விடுமுறையுடன் பீஸ்ட் டிக்கெட் பரிசளித்த ஐ.டி நிறுவனம்!
இந்நிலையில் விருதுநகரிலுள்ள அமிர்தராஜ் தியேட்டரில் நேற்று காலை 7 மணிக்கு ரசிகர்களுக்காக பீஸ்ட் திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால் மிக சொற்ப அளவிலான ரசிகர்கள் மட்டுமே அதைப் பார்க்க வந்திருந்தனர். விஜய் படங்கள் ரிலீஸாகும் போது அதனை திருவிழா போல கொண்டாடும் ரசிகர்களுக்கு மத்தியில், காட்சிக்கு போதுமான பார்வையாளர்கள் இல்லாமல் காற்று வாங்கியிருக்கிறது விருதுநகர் அமிர்தராஜ் திரையரங்கம்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.