ரதயாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்கும் எண்ணமில்லை - திவ்யா சத்யராஜ்

ரதயாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.

ரதயாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்கும் எண்ணமில்லை - திவ்யா சத்யராஜ்
திவ்யா சத்யராஜ்
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2020, 12:41 PM IST
  • Share this:
பிரபல நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக செயல்படுகிறார். கொரோனா நேரத்தில் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமர் மோடிக்கு திவ்யா சத்யராஜ் கடிதம் எழுதியது சமூகவலைதளங்களில் வைரலானது. தற்போது ரத யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் வைத்த கோரிக்கைக்காக மன்னிப்புக் கேட்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து திவ்யா சத்யராஜ் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரதயாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கிறது. எனவே ரதயாத்திரையை அனுமதிப்பது நியாயம் கிடையாது.


தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் ரத யாத்திரையை எதிர்க்கிறேன். மதத்தை வளர்க்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல்நலத்தின் மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ரதயாத்திரையை எதிர்த்ததற்காக மன்னிப்பு கேட்கும் எண்ணம் இல்லை.” இவ்வாறு திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading