Home /News /entertainment /

உங்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறதா? - அப்படியானால் நீங்களும் இயக்குனராகலாம்!

உங்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறதா? - அப்படியானால் நீங்களும் இயக்குனராகலாம்!

பயிற்சிப் பட்டறை

பயிற்சிப் பட்டறை

உலகம் முழுவதும் செல்போனில் திரைப்படம் எடுப்பது அதிகரித்து வருகிறது. எப்படி செல்போனில் திரைப்படம் எடுப்பது, அதனை செல்போனிலேயே எப்படி எடிட் செய்வது என்பது குறித்து மார்ச் மாதம் 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் பயிற்சி பட்டறை ஒன்றை இவர்கள் நடத்துகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தொடர்ச்சியாக குறும்பட ஆவணப்பட பயிற்சிப் பட்டறைகளை நடத்திவரும் நிழல் பதியம் அமைப்பு செல்போனில் திரைப்படம் எடுப்பதற்கான 4 நாள் பயிற்சிப் பட்டறையை சென்னையில் நடத்துகிறது. சென்னைக்கு வெளியே இருக்கும் திரைப்பட ஆர்வலர்களுக்கு திரைப்படம் சார்ந்து தங்களுடைய திறமையை வெளிக்காட்ட எவ்வித வழியும் தமிழ்ச்சூழலில் இல்லை. இப்படிப்பட்டவர்களை தேடிச் சென்று அவர்களுக்கு திரைப்படக் கலையின் தொழில்நுட்பத்தை நிழல் பதியம் பயிற்றுவித்து வருகிறது.

அவர்கள் நடத்தும் பயிற்சிப் பட்டறையின் வழியாக திரைப்படக் கலையை கற்று திரையுலகில் கோலோச்சியவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் பட்டறையில் தயாராகி வந்த இளைஞர்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் எடுத்துள்ளார்கள்.

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் திரைப்படத்தின் எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவில் பங்காற்றி இருப்பவர்கள் இவர்களின் பயிற்சி பட்டறையில் ஒரு காலத்தில் மாணவராக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் செல்போனில் திரைப்படம் எடுப்பது அதிகரித்து வருகிறது. எப்படி செல்போனில் திரைப்படம் எடுப்பது, அதனை செல்போனிலேயே எப்படி எடிட் செய்வது என்பது குறித்து மார்ச் மாதம் 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் பயிற்சி பட்டறை ஒன்றை இவர்கள் நடத்துகின்றனர்.

Also read... சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

சென்னை வண்டலூர் அருகில் உள்ள நெடுங்குன்றம் பாலையா தோட்டத்தில் இந்த பயிற்சிப் பட்டறை நடைபெற இருக்கிறது. வழக்கம்போல் உணவு, தங்குமிடத்தை அவர்களே ஏற்பாடு செய்வார்கள். பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றும் அனைவரும் பட்டறையின் முடிவில் தாங்களாகவே செல்போனில் ஒரு குறும்படத்தை எடுத்து எடிட் செய்வதற்கு வசதி செய்து தரப்படும்.

திரைப்படத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு தங்களையும் இயக்குனராக தகுதிப்படுத்திக் கொள்ளலாம். கட்டணம் மற்றும் மேலதிக தகவல்களுக்கு 9444484868 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Short film

அடுத்த செய்தி