• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’இந்த சீரியலாவது நல்லா இருக்கனும் கடவுளே’ - ரீ என்ட்ரி கொடுக்கும் நிவிஷா!

’இந்த சீரியலாவது நல்லா இருக்கனும் கடவுளே’ - ரீ என்ட்ரி கொடுக்கும் நிவிஷா!

நிவிஷா

நிவிஷா

இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருந்த நிவிஷா, கலர் கலரான புகைப்படங்களை பதிவிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.

  • Share this:
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் அம்மன் சீரியலில் ‘துர்கா’ என்ற கதாப்பாத்திரம் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார் நிவிஷா.

தஞ்சாவூரைச் சேர்ந்த நிவிஷா, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை கனவுடன் சென்னை வந்தார். வெள்ளித்திரையில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால், தன்னுடைய ரூட்டை சின்னத்திரை பக்கம் திருப்பினார். படிக்கும்போதே குறும்படங்களில் நடித்த அனுபவம் இருந்ததால், ஒருவழியாக முதல் வாய்ப்பு கிடைத்தது. சன் டீவியில் ஒளிபரப்பான ‘தெய்வ மகள்’ சீரியலில் அறிமுகமானார். லீட் ரோல்களில் நடிக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருந்தாலும், அவரது உருவத்துக்கு ஏற்ப அடுத்தடுத்து நெகடிவ் கேரக்டர்களே தொடர்ந்து அமைந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜய் டீவியில் ஒளிபரப்பான ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் சூப்பராக நடித்துக் கொண்டிருந்தார். திடீரென கதையின் டிராக் நெகடிவ்வாக திரும்பியதால் மன வருத்தமடைந்த அவர், சீரியலை விட்டு விலகினார். கதை சொல்லும்போது பாசிட்டிவாக இருந்ததாகவும், போகப்போக வில்லியாக கதாப்பாத்திரம் செல்வதால், சீரியலில் இருந்து விலகியதாக தெரிவித்தார். தொடர்ந்து வில்லியாக நடிப்பதால், நெகடிவ் கமெண்டுகள் அதிகம் வருவதால், இனிமேல் நெகடிவ் ரோலில் நடிக்கவே மாட்டேன் என சபதத்துடன் சின்னத்திரையை விட்டே ஒதுங்கியிருந்தார்.

ஆனாலும், இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருந்த நிவிஷா, கலர் கலரான புகைப்படங்களை பதிவிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். சேலை முதல் மார்டன் டிரஸ் வரை, எந்த உடை அணிந்தாலும் கவர்ச்சிக்கும் பஞ்சமில்லாமல் பார்த்துக் கொண்டார். அதனால், அவரின் ஒவ்வொரு போஸ்டும் ஆயிரக்கணக்கான லைக்குகளை குவித்து வந்தது. அவர் போஸ்ட் போடும்போதெல்லாம், மீண்டும் எப்போது சின்னத்திரையில் உங்களை பார்க்கலாம்? என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே வந்தனர்.

Also read... ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள சர்வைவர் நிகழ்ச்சி - வைரலாகும் ப்ரோமோ வீடியோ!

இதனால், என்னவோ கடந்த சில நாட்களாக போஸ்ட் போடுவதையே நிறுத்திக் கொண்ட அவர், திடீரென ஒரு புதிய லுக்கில் போட்டோ போட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். புகைப்படமே கொள்ளை அழகாக இருந்தாலும், நிவிஷா கொடுத்த அப்டேட் தான் ஹைலைட். அதாவது, மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார் நிமிஷா. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’அம்மன்’ சீரியலில் ’துர்கா’ என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

அவரின் இந்த கேரக்டர் மற்றொரு லீட் ரோல் என கூறப்படுகிறது. லீட் ரோல், அதுவும் பாசிட்டிவ் கேரக்டராக இருந்தால் மட்டுமே சின்னதிரைக்கு திரும்புவேன் என 2 ஆண்டுகளாக உறுதியாக இருந்த நிமிஷா, தற்போது சீரியலுக்கு திரும்பியிருப்பது அவருடைய ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. சீரியலில் நடிக்க இருப்பதால், உங்களின் அழகான ஃபோட்டோக்களை போட மறந்துடாதீங்க நிமிஷா என்ற கோரிக்கையையும் ரசிகர்கள் வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: