• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Nivin Pauly: ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படம்

Nivin Pauly: ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படம்

நிவின் பாலி - இயக்குநர் ராம்

நிவின் பாலி - இயக்குநர் ராம்

நிவின் பாலியின் கடைசி தமிழ் படமான ரிச்சி சரியாக போகவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

  • Share this:
    கற்றது தமிழ் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

    சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் கடைசியாக தயாரித்த படம் மாநாடு. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் படம் திரைக்கு வரவுள்ளது.

    இந்நிலையில், தனது அடுத்தத் தயாரிப்பு குறித்து இன்று சுரேஷ் காமாட்சி அறிவித்தார். 'தென்னிந்திய சினிமாவின் பெருமைமிகு முகங்களுடன் ஒரு சிறந்த பயணத்தின் தொடக்கம்...' என்ற குறிப்புடன் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் பட அறிவிப்பை வெளியிட்டார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அஞ்சலியும், சூரியும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ராமின் கடைசிப்படமான பேரன்பில் மம்முட்டி நடித்திருந்தார். பல விருதுகளை படம் வாங்கியது. இப்போது நிவின் பாலியை நாயகனாக வைத்து படம் இயக்குகிறார். நிவின் பாலியின் கடைசி தமிழ் படமான ரிச்சி சரியாக போகவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

    ராமின் படம் என்றால் இசை யுவன் என்பது எழுதப்படாத விதி. இந்தப் படத்துக்கும் யுவனே இசை. நா.முத்துக்குமார் தான் இல்லை. ராம் இயக்கத்தில் நடிக்க ஆவலுடன் உள்ளதாக நிவின் பாலி கூறியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: