பாடகியாக அவதாரம் எடுக்கும் நிவேதா தாமஸ்.... குவியும் வாழ்த்து

பாடகியாக அவதாரம் எடுக்கும் நிவேதா தாமஸ்.... குவியும் வாழ்த்து

நடிகை நிவேதா தாமஸ்

நிவேதா தாமஸ் தற்போது பாடகியாக அவதாரமெடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது. இவரது ரசிகர்கள் பலரும் இவரின் புதிய முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 • Share this:
  தமிழில் வெளியான மை டியர் பூதம் என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நிவேதா தாமஸ். அதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். அதேபோல் ஜில்லா படத்தில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிவேதா, பாபநாசம் படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்திருந்தார். தர்பாரில் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார்.

  இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக உள்ளார். 4.8 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள நிவேதா தற்போது வெளியிட்டுள்ள வீடியோ இன்று இன்ஸ்டாவில் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது.

   

      
  View this post on Instagram

   

  A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)


   

  அந்த வீடியோவில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் இன்றளவும் பாடப்படும் பாடலான நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது பாடலை பாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த பலரும் அவரது புதிய முயற்சிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

   

      

   

   

  இதற்கு முன்னதாக பிரபுதேவா - ஹன்சிகா நடிப்பில் வெளியான 'குலேபகாவளி' படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு நிவேதா நடனமாடிய வீடியோ ஒன்று ட்விட்டரில் அதிகம் பார்க்கப்பட்டது.
  Published by:Sankaravadivoo G
  First published: