பார்ட்டியில் குத்து டான்ஸ் ஆடிய விஜய் பட நடிகை - வைரல் வீடியோ

பார்ட்டி ஒன்றில் பிரபுதேவாவின் பாடலுக்கு நடிகை நிவேதா தாமஸ் நடனமாடியுள்ளார்.

news18
Updated: November 26, 2018, 6:03 PM IST
பார்ட்டியில் குத்து டான்ஸ் ஆடிய விஜய் பட நடிகை - வைரல் வீடியோ
நிவேதா தாமஸ்
news18
Updated: November 26, 2018, 6:03 PM IST
பார்ட்டி ஒன்றில் பிரபுதேவாவின் பாடலுக்கு நடிகை நிவேதா தாமஸ் நடனமாடியுள்ளார்.

தமிழில் வெளியான மை டியர் பூதம் என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நிவேதா தாமஸ். அதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார். அதேபோல் ஜில்லா படத்தில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிவேதா, பாபநாசம் படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்திருந்தார்.

சசிக்குமார் நடிப்பில் 2011- ம் ஆண்டு வெளியான போராளி படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.


பிரபுதேவா - ஹன்சிகா நடிப்பில் வெளியான 'குலேபகாவளி' படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு நடனமாடியிருக்கும் அவர், அதை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவில் 96 படம் பார்த்து உருகிய கிரிக்கெட் வீரர் தினேஷ் - வீடியோ

First published: November 26, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...