ஆபாசமாகக் கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு அல்டிமேட் அட்வைஸ் கொடுத்த நிவேதா தாமஸ்!

ஆபாசமாகக் கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு அல்டிமேட் அட்வைஸ் கொடுத்த நிவேதா தாமஸ்!
நடிகை நிவேதா தாமஸ்
  • News18
  • Last Updated: November 10, 2019, 2:19 PM IST
  • Share this:
சமூகவலைதளத்தில் தன்னிடம் மோசமான கேள்விகள் கேட்ட நெட்டிசனுக்கு நடிகை நிவேதா தாமஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

பாபநாசம் படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்திருந்த நிவேதா தாமஸ், தற்போது ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் அவருக்கு மகளாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார் நிவேதா தாமஸ். அப்போது சிலர் அவரிடம் மோசமான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.


அதற்கு பதிலளிக்காமல் கடந்து சென்ற நிவேதா தாமஸ் இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் பக்கத்தில் அதற்கான பதிலைக் கூறியுள்ளார். அதில், உங்களுடைய சில வேடிக்கையான கேள்விகளுக்கு பதிலளித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதேவேளையில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளில் எப்போது திருமணம், ஆண் நண்பர்கள் இருக்கிறார்களா? நீங்கள் கன்னித் தன்மையுடன் இருக்கிறீர்களா என்ற கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.முதலில் நீங்கள் சக மனுஷியிடம் பேசுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கொஞ்சம் மரியாதையாகவும், கண்ணியமாகவும் நடந்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
First published: November 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்