இது முதன்முறையல்ல: உணவகம் மீது நிவேதா பெத்துராஜ் குற்றச்சாட்டு!

நிவேதா பெத்துராஜ்

இன்ஸ்டாகிராம் சமூக ஊடக பக்கத்தில் நிவேதா பெத்துராஜ் ஆக்டிவாக இயங்கி வருகிறார். இந்நிலையில், தனக்கு உணவு டெலிவரி செய்த உணவகம் மீது நிவேதா பெத்துராஜ் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

  • Share this:
நடிகை நிவேதா பெத்துராஜ், உணவகம் ஒன்றின் மீது தெரிவித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழகத்தைச் சேர்ந்த இவர் தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார்.  இதைத் தொடர்ந்து டிக் டிக் டிக், திமிர் பிடிச்சவன், சங்கத் தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். பிரபுதேவாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. தெலுங்கிலும் சில படங்களில் அவர் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம்  சமூக ஊடக பக்கத்திலும்  நிவேதா பெத்துராஜ் ஆக்டிவாக இயங்கி வருகிறார். இந்நிலையில், தனது ஸ்டேடஸில் அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.  அதில்,  ஸ்விக்கி செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாட்டை ஆர்டர் செய்ததாகவும்,  சாப்பாட்டை சாப்பிட முயன்றபோது அதில் கரப்பான்பூச்சி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதாரமாக புகைப்படத்தையும் நிவேதா பெத்துராஜ் இணைத்துள்ளார்.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இது தொடர்பாக நிவேதா பெத்துராஜ், ஸ்விக்கி நிறுவனம் மற்றும் உணவங்கள் என்ன தரத்தை தற்போது பின்பற்றுகின்றன என தெரியவில்லை. இதுவரை இரண்டு முறை எனது உணவில் கரப்பான் பூச்சியை கண்டெடுத்துள்ளேன். இத்தகைய உணவகங்களில் தினமும் சோதனை நடத்தி , தரமாக இல்லையென்றால் அதிக அபராதம் விதிக்க வேண்டும். இந்தியா முழுவது ஸ்விக்கி நிறுவனம் உணவு டெலிவரி செய்துவரும் நிலையில், தங்களது செயலியில் தரமான உணவகங்களை இணைக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.


கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும் குறிப்பிட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிவேதா பெத்துராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Published by:Murugesh M
First published: