Home /News /entertainment /

Nithya Menen: குழந்தை நட்சத்திரமாக க்யூட் நித்யா மேனன் - வைரலாகும் வீடியோ!

Nithya Menen: குழந்தை நட்சத்திரமாக க்யூட் நித்யா மேனன் - வைரலாகும் வீடியோ!

நித்யா மேனன்

நித்யா மேனன்

ஹனுமான் என்ற படத்தில் நடிகை தபுவுடன் குழந்தை நடத்திரமாக நடித்திருப்பார் நித்யா.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நடிகை நித்யா மேனன் சைல்ட் ஆர்டிஸ்டாக நடித்த வீடியோ ஒன்று இணையத்தில் லைக்ஸை குவித்து வருகிறது. 

    குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கியவர் நடிகை நித்யா மேனன். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். அவர் நடித்திருந்த உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேய்ஸ், ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்திருந்தது.

    இறுதியாக நித்யா மேனன் நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானது. தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில் நித்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அவரின் கண்கள் கூட நடிப்பதாக இயக்குநர் இமயம் பாரதிராஜா வாழ்த்தியிருந்தார். படத்தைப் பார்த்த ரசிகர்கள் நித்யா மேனன் போல தங்களுக்கு ஒரு தோழி இல்லையே என ஏங்கினர். அந்தளவுக்கு ஷோபனாவின் கதாபாத்திரம் ரசிகர்களைக் கவர்ந்தது.

    பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம் - சோகத்தில் திரையுலகம்



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் அவர் குழந்தை நட்சத்திரமாக நித்யாமேனன் நடித்திருந்த காட்சிகளை பாடலுடன் இணைத்து வைப் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். ஹனுமான் என்ற படத்தில் நடிகை தபுவுடன் குழந்தை நடத்திரமாக நடித்திருப்பார் நித்யா. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Nithya menon

    அடுத்த செய்தி