ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'ஹெல்ப்லைன் நம்பரே இப்போதான் தெரியும்.. யாரும் ஃபன் பண்ணாதீங்க' - முக்கிய விஷயம் பேசிய சாய்பல்லவி

'ஹெல்ப்லைன் நம்பரே இப்போதான் தெரியும்.. யாரும் ஃபன் பண்ணாதீங்க' - முக்கிய விஷயம் பேசிய சாய்பல்லவி

சாய்பல்லவி

சாய்பல்லவி

பெண்களின் பிரச்சனைக்காக ஹெல்ப்லைன் எண் இயங்கி வருவதாகவும், கிண்டலடிக்க இந்த நம்பரை பயன்படுத்த வேண்டாம் எனவும் சாய்பல்லவி தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  குடும்ப பிரச்னைகள், போக்சோ, குடும்ப வன்முறை போன்ற பிரச்சனைகளில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்குவது தொடர்பாக கடந்தாண்டு நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையம் சென்னை காவல்துறையால் தொடங்கப்பட்டது.

  கடந்த ஓராண்டில் மட்டும் இந்த ஆலோசனை மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான 508 வழக்குகள் கையாளப்பட்டதாகவும், அதில் 8% ஆண்களுக்கும், 92% பெண்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

  இவைகளில் 146 குடும்ப பிரச்சனை வழக்குகளும், 135குடும்ப வன்முறை வழக்குகளும், 13 போக்சோ வழக்குகள் ஆலோசனைக்கு வந்ததாகவும், அதில் 64% வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

  இந்த ஆலோசனை மையத்தின் ஓராண்டு நிறைவு நிகழ்வு எழும்பூர் பழைய கமிஷ்னர் அலுவலக சாலையில் உள்ள பாரம்பரிய காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில்  நடைபெற்றது. இந்த நிகழ்வில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், காவல் ஆணையர் சங்கர் ஜிவால், திரைப்பட நடிகை சாய் பல்லவி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலோசனை மையத்தின் கட்டிடத்தினை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

  இதனை தொடர்ந்து நிகழ்ச்சியின் மேடையில் பேசிய நடிகை சாய்பல்லவி, ''இந்த ஆலோசனை மையத்தின் 108 என்ற எண் இருப்பதே எனக்கு ஒரு மாசத்துக்கு முன்புதான் தெரிய வந்தது . இந்த எண் பெண்களின் பிரச்னைக்காக இயங்கி வருகிறது. அனைவருக்கும் இது செல்ல வேண்டும். ஃபன் செய்வதற்காக இந்த நம்பருக்கு யாரும் கால் செய்யக்கூடாது''  என தெரிவித்தார். இந்த ஆலோசனை மையம் மூலமாக இன்னும் நிறைய பெண்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

  சாய்பல்லவி

  தென்னிந்தியாவின் மிக பிரபலமான நடிகை சாய்பல்லவி. பிரேமம் மலையாளம் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். நடிப்பு மட்டும் இல்லாமல் தான் அசத்தலான நடனத்தினால் இவருக்கென பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.அது மட்டுமின்றி சாய்பல்லவி ஒரு மருத்துவர். தற்பொழுது கார்கி என்ற தமிழ் படத்தில் நடித்தார்.

  பின்னர் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், முதல்வர் பொறுப்பேற்ற 20நாட்களில் பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம் பெற வேண்டும் என தன்னிடம் தெரிவித்ததாகவும், அதன்படி நிர்பயா ஆலோசனை மையம் தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

  விழாவில் கலந்துகொண்ட போலீசார்

  பெண்களின் மனதில் உள்ள ஆதங்கத்தை கேட்டாலே போதும், எளிதாக தீர்வு காணப்படும் எனவும் குடும்பம் கட்டுக்கோப்போடு இருந்தால் மட்டுமே பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமையும்,அந்த வகையில் இந்த ஆலோசனை மையம் செயல்படுவதாகவும் அவர் கூறினார். 181பெண்கள் உதவி எண்ணிற்கு ஒரு நாளைக்கு மட்டும் 500 அழைப்புகள் வருவதாகவும், அதில் கவுன்சிலிங், சட்ட உதவிகள், நக்கலடிக்கவும் சிலர் தொடர்பு கொள்வதாகவும் அவர் கூறினார்.

  இதை தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஆலோசனை மையத்தில் ஒரு ஆண்டில் மட்டும் 500 வழக்குகள் கையாளப்பட்டதாகவும், அதில் 134 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்த கட்டமாக மாணவர்களுக்கு டிரெயினிங் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

  Read More: ஸ்கிரிப்ட் ரெடி! த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா?! விரைவில் அறிவிப்பு

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், விடுதிகளில் பாலியல் நடைபெறுவது தொடர்பான கேள்விக்கு, அனைத்து விடுதிகளிலும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அரசு விதிமுறைகளுக்குட்பட்டு செயல்படுகிறதா என அறிக்கைகள் கேட்டுள்ளதாகவும், அறிக்கை சமர்பிக்காத விடுதிகள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Actress sai pallavi, Nirbhaya Case, Tamilnadu police