Home /News /entertainment /

சினிமா கற்க ஒருவருட கோர்ஸ் - NIPFA திருநாவுக்கரசு பேட்டி!

சினிமா கற்க ஒருவருட கோர்ஸ் - NIPFA திருநாவுக்கரசு பேட்டி!

NIPFA திருநாவுக்கரசு

NIPFA திருநாவுக்கரசு

நிழல் - பதியம் கடந்த ஆறு வருடங்களாக முழுநீள திரைப்படம் எடுப்பதற்கான பயிற்சியையும் அளித்து வருகிறது. தற்போது தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஒருவருட பயிற்சி வகுப்பை நடத்துகிறது.

  • News18
  • Last Updated :
கடந்த 15 வருடங்களாக நிழல் - பதியம் அகாடமி தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் குறும்பட, ஆவணப்பட பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறது. திரைப்பட கலை குறித்து முழுநேரம் பயில முடியாதவர்களுக்கு  இந்தப் பயிற்சிப் பட்டறைகள் வரப்பிரசாதமாக அமைந்தன. நிழல் - பதியம் கடந்த ஆறு வருடங்களாக முழுநீள திரைப்படம் எடுப்பதற்கான பயிற்சியையும் அளித்து வருகிறது. தற்போது தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஒருவருட பயிற்சி வகுப்பை நடத்துகிறது. வரும் ஜுலையில் வகுப்புகள் தொடங்கயிருக்கும் நிலையில், நிழல் - பதியம் அகாடமி திருநாவுக்கரசை சந்தித்தோம்.

ஜுலையில் ஆரம்பிக்கயிருக்கும் ஒருவருட கோர்ஸ் குறித்து விளக்கமாக சொல்ல முடியுமா?

நாங்க தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் குஷம்பட, ஆவணப்பட பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வந்தோம். அதுல கலந்துகிட்டு, சினிமா தொழில்நுட்பம் கத்துகிட்ட பல பேர் எடிட்டரா, திரைக்கதையாசிரியரா, ஒளிப்பதிவாளரா, இயக்குநரா தமிழ் சினிமால பணியாற்றிட்டு இருக்காங்க. குறும்படம், ஆவணப்படம் மட்டுமில்லாம பியூச்சர் ஃபிலிம்ங்கிற முழுநீள திரைப்படம் எடுக்கவும் நாங்க பயிற்சி தர்றோம். இது ஒருவருட கோர்ஸ். எங்க அகாடமி தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்துடன் அதிகாரப்பூர்வமா இணைக்கப்பட்டுள்ளது.

இது ரெகுலர் வகுப்புகளா?

ஆமா, காலையிலயிருந்து மாலைவரைக்கும் இருக்கும்.

என்னென்ன கத்து தர்றீங்க?

திரைக்கதை எழுதுறது எப்படிங்கிறதுல தொடங்கி, புகைப்படக்கலை,  ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம், குறும்படம், ஆவணப்படம்னு எல்லாமே சொல்லித் தர்றோம். கூடுதலா சினிமா வரலாறு குறித்தும் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறோம்.

சினிமா எடுக்க சினிமா வரலாறு தெரிஞ்சுக்கணுமா?

தெரியாமலும் படம் எடுக்கிறாங்க. அப்படி எடுக்கிறவங்க ஒன்னு இரண்டு படத்தோட காணாமப் போயிடுவாங்க. நம்ம சினிமா எது, அது எப்படி இருந்திச்சி, எப்படி மாறிச்சி, ஏன் மாறிச்சிங்கிறது தெரிஞ்சுகிட்டா எந்த மாதிரி சினிமா எடுக்கணுங்கிற புரிதல் விசாலப்படும்.



இந்த வகுப்புகளை யார் எடுக்கிறாங்க?

ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவமும், அனுபவமும் உள்ளவங்கதான் இந்த வகுப்புகளை எடுப்பாங்க. அதோடு தமிழ் சினிமாவின் முன்னணி படைப்பாளிகளும் மாணவர்களிடம் உரையாடி, அவங்க அனுபவத்தை பகிர்ந்துப்பாங்க. மாணவர்கள் அந்தப் படைப்பாளிகளின் அனுபவத்தை, அவர்கள் சினிமாவை அணுகும் முறையை இதனால நெருக்கமா கத்துக்க முடியும்.

தியரிட்டிகலா சினிமாவை சொல்லிக் கொடுப்பதே சினிமா எடுக்க போதுமானதா?

தியரி ரொம்ப முக்கியம். அதேநேரம் ஸ்பாட் அனுபவமும் ரொம்ப முக்கியம். நாங்க வெறுமனே சினிமா குறித்து சொல்லித் தர்றதில்லை. அவங்களை திரைக்கதை எழுத வைக்கிறோம், எடிட்டிங், ஒளிப்பதி என்னன்னு சொல்லித் தந்து அவங்களையே ஒளிப்பதிவு செய்ய வைக்கிறோம். அவங்களையே எடிட்ட பண்ண வைக்கிறோம். அதனால தியரி, பிரடிகல்னு இரண்டும் சேர்ந்த ஒரு முழுமையான திரைப்பட தயாரிப்பு வகுப்புகளா இது இருக்கும்.



NIPFA வோட தனித்தன்மை என்ன?

பொதுவா நீங்க எடிட்டிங் கத்துக்கணும்னா அதுக்குரிய கோர்ஸ்தான் செய்ய முடியும். அங்க திரைக்கதையோ, ஒளிப்பதிவோ, இயக்கமோ சொல்லித்தர மாட்டாங்க. ஒளிப்பதிவு பத்தி படிச்சா அங்க எடிட்டிங் பத்தியோ சினிமாவின் மத்த துறைகள் பத்தியோ சொல்லித்தர மாட்டாங்க. ஆனா நிபால ஒரே கட்டணத்துல நாங்க அனைத்தையும் கத்துத் தர்றோம்.

அதுக்கு என்ன காரணம்?

ஒரு இயக்குநர் தனது படத்துக்கு எடிட்டர், ஒளிப்பதிவாளர்னு தனித்தனியா ஆளை வச்சுகிட்டாலும் எடிட்டிங், ஒளிப்பதிவு, திரைக்கதை போன்ற மற்ற துறைகள் பற்றிய ஆழ்ந்த புரிதல் இருந்தால்தான் இயக்குநர் வேலையை சிறப்பா செய்ய முடியும். ஒரு திரைப்படம் இரண்டு மேஜைகளில் உருவாகிறது, ஒன்று திரைக்கதை எழுதும் மேஜை, இன்னொன்று எடிட்டிங் மேஜைன்னு சொல்வாங்க. ஒரு திரைக்கதையாசிரியருக்கு எடிட்டிங் சென்ஸ் அவசியம் இருக்கணும். அதே மாதிரி எடிட்டருக்கும் திரைக்கதை குறித்த புரிதல் இருக்கணும். இவையெல்லாம் தனித்தனி துறையாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

Also read... இசையமைப்பாளராக மாறும் இயக்குநர் மிஷ்கின்

வகுப்புகள் எப்போது ஆரம்பிக்க உள்ளது?

ஜுலையில் ஆரம்பமாகும். மாணவர் சேர்க்கை முடிகிற நிலையில் இருக்கு. இதுவொரு சர்ட்டிபிகெட் கோர்ஸ். ஒரு வருட இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Film

அடுத்த செய்தி