Home /News /entertainment /

’நினைவிருக்கும் வரை விவேக்’ வீடியோ ஆல்பம் வெளியீடு!

’நினைவிருக்கும் வரை விவேக்’ வீடியோ ஆல்பம் வெளியீடு!

விவேக்

விவேக்

விவேக் எனக்கு பல படங்களில் வாய்ப்பு வாங்கித் தந்திருக்கிறார். அவருடன் நடிப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

    மறைந்த நடிகர் விவேக்கிற்கு, நினைவிருக்கும் வரை விவேக் என்ற தலைப்பில் வீடியோ ஆல்பம் சென்னையில் வெளியிடபட்டது. 

    சென்னை வடபழனியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக M.S பாஸ்கர் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் தலைமை ஏற்று வீடியோவை வெளியிட்டனர்.

    மேடையில் பேசிய நடிகர் M.S பாஸ்கர், ”காமெடி நடிகர் விவேக் ஒரு நல்ல கலைஞர். விவேக் மற்றும் எனது தம்பியும் தலைமைச் செயலகத்தில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். விவேக் எனக்கு பல படங்களில் வாய்ப்பு வாங்கித் தந்திருக்கிறார். அவருடன் நடிப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். விவேக் அவரின் இழப்பு எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. அவரின் ஆன்மா சாந்தி அடைந்து இருக்கும்” என்று கூறினார்.

    உங்கள் வீட்டு பெண்களுக்கும் மார்பகங்கள் உண்டு - உள்ளாடை அளவு குறித்து கேட்டவருக்கு பிரியா பவானி சங்கர் பதில்

    தொடர்ந்து பேசிய அவர், மக்களிடையே நல்லுள்ளம், நற்பண்பு கொண்ட நல்ல கலைஞன் விவேக் தான். கலாம் மீது மிகுந்த அன்பு கொண்ட அவரது புகழ் நிலைத்து நிற்கும். திருநாவுக்கரசருக்கும், திருஞான சம்பந்தருக்கும் இடையிலான நட்பை போன்றது கலாம் விவேக் நட்பு என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actor Vivek

    அடுத்த செய்தி