நிலவை கொண்டு வா பாடலின் ரீல்ஸ் வீடியோ மூலம் பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளனர் விக்கல்ஸ் குழுவினர்.
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று பலரது பொழுதுபோக்காக இருப்பவை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள்தான்..இவர்களைக் கவர்வதற்காக, மீம்ஸ் கிரியேட்டர்கள் முதல் வீடியோ எடிட்டர்கள் வரை எதையாவது புதுசு புதுசாக யோசித்து வீடியோக்களை வெளியிடுகின்றனர்.
பொதுவாக, ஒரு படத்தின் பாடலோ, வசனமோ ஹிட் அடித்துவிட்டால், அதை வைத்து பல வீடியோக்களை உருவாகி விடுகின்றன. சீரியசான காட்சியை காமெடியாக்கி, அல்லது காமெடியான காட்சியை சீரியசாக்கி வேறுவிதமான வீடியோவை உருவாக்கி, சமூகவலைதளங்களில் உலவ விடுகிறார்கள்.
குழந்தை பிறந்த 1 மாதத்தில் ஷாக் கொடுத்த சூர்யா பட நடிகை!
பிரம்மாண்ட படங்கள் மற்றும் பாடல்களுக்கு இடையே சில காமெடி வீடியோக்களும் திடீர் திடீரென டிரெண்டாகி விடுகிறது. அண்மையில், புஷ்பா திரைப்படத்தில் ஹிட்டடித்த ஊ சொல்றியா மாமா பாடலை, தில்லானா மோகனாம்பாள் பாடல் காட்சியை இணைத்து வைரலாக்கினார்கள் அந்த வகையில் விக்கல்ஸ் குழுவினர் வாலி பட பாடலை செம்மயாக நக்கலடித்து வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://youtu.be/By2vIiNeG1s
1999ஆம் ஆண்டு சிம்ரன், ஜோதிகா-வுடன் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் திரைப்படமாக வெளிவந்தது வாலி..தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்த இந்தப் படத்தில் இடம்பெற்ற நிலவைக் கொண்டு வா பாடல், அன்றைய காலத்தில் மெகா ஹிட்.
மும்பையில் நடந்த The Gray Man நிகழ்ச்சி.. வேஷ்டி சட்டையுடன் மாஸாக என்ட்ரி கொடுத்த தனுஷ்!
அனுராதா ஸ்ரீராம் உச்சக் குரலிலும், உன்னிகிருஷ்ணன் தனது வழக்கமான மென்மைப் போக்கை கடைப்பிடித்தும் பாடிய பாடல். சீரியசாகவும், ரொமாண்டிக்காகவும் பாடிய இந்த பாடலை சிரிப்பாக்கி வைரல் ஆக்கியிருக்கிறார்கள் விக்கல்ஸ் குழுவினர்...
சமூகவலைதளங்களில் மிகப்பெரிய அளவுக்கு வைரலான இந்த ரீல்ஸ் வீடியோவை, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .இந்த ஜாலி வீடியோவை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டு, இளைஞர்களை வெகுவாக பாராட்டியிருக்கிறார் பாடகர் உன்னிகிருஷ்ணன்...
நிலவைக் கொண்டு வா பாடலுடன் தொடர்புடையவர்களையே மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள விக்கல்ஸ் குழுவினர், இதுபோன்று மேலும் பல வீடியோக்களையும் வெளியிட்டிருக்கின்றனர்..பள்ளி மேடைகளில் அரைகுறை நடன அசைவுகளுடன் மாணவர்கள் செய்யும் அட்டகாசம், ஜெனரேசன் கேப் என பல விஷயங்களை கையில் எடுத்துள்ளது விக்கல்ஸ் குழு.
நிலவைக் கொண்டு வா பாடலைப் போலவே, பல திரைப்பட பாடல்களின் ரெக்கார்டிங்கின் போது நடந்தவற்றையும் காமெடியாக அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.ஆரம்பத்தில், சில ஆயிரம் சப்ஸ்கிரைபர்களுடன் இருந்த விக்கல்ஸ் யூடியூப் தற்போது பல லட்சம் சந்தாதாரர்களையும், பல கோடி பார்வையாளர்களையும் பெற்றுள்ளது...
சூர்யவம்சம் படத்தைப் போல, ஒரே பாடலில் ஓஹோன்னு வரணும் என்பது பலரது ஆசை... அதை நிலவை கொண்டு வா பாடலின் மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள் விக்கல்ஸ் குழுவினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith, Instagram, SJSurya, Trending