நடிகர் ஆதி நடிகை நிக்கி கல்ராணியின் திருமண வீடியோ டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த அளவிலான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஸ்மார்ட்டான தோற்றம் மற்றும் நேர்த்தியான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஆதி. மிருகம் திரைப்படத்தில், மனிதர்களுக்கான அடிப்படை குணங்கள் கூட இல்லாத மிருகம் போன்ற பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் ஆதி. அடுத்தடுத்து ஈரம், மரகத நாணயம் என்று வெவ்வேறு வேடங்களில் அசத்தினார். அதே போல நிக்கி கல்ராணியும், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு பார்ட் 2 உள்ளிட்ட பல ஜாலியான படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையே படங்களில் ஒன்றாக நடித்த ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி காதலில் விழுந்து கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தமும் செய்துக் கொண்டது. இதையடுத்து அவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கடந்த மே மாதம் நடந்தது.
திருமணத்தில் மெஹந்தி, சங்கீத் போன்ற சடங்குகள் நடத்தப்பட்டன. அதில் நடிகர் ஷிரிஷ், ஆர்யா, சாயிஷா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து ஆதி - நிக்கி கல்ராணி திருமண படங்கள் இணையத்தில் லைக்ஸை குவித்தன.
விஜய் தலைமையில் நடந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் இரண்டாவது திருமணம்!
Almost 3 months as Mr & Mrs already, feels like yesterday ♥️
Here’s a small glimpse of what our magical day looked like 💫
Much love to our loved ones who were a part of our big day & made it special♥️@AadhiOfficial
▶️https://t.co/1yqNnxecBb
— Nikki Galrani Pinisetty (@nikkigalrani) August 12, 2022
இந்நிலையில் தற்போது தங்களின் திருமண வீடியோ டீசரை ட்விட்டரில் பகிர்ந்த நிக்கி கல்ராணி, “ஏற்கனவே Mr & Mrs ஆகி கிட்டத்தட்ட 3 மாதங்கள்.. நேற்று போல் உணர்கிறேன். எங்கள் திருமண நாள் எப்படி இருந்தது என்பதற்கான சிறிய பார்வை இங்கே” எனத் தெரிவித்திருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor aadhi, Nikki Galrani