என்.ஜி.கே டீசரை வெளியிடுவது இவர்தான் - படக்குழு அறிவிப்பு

கடந்த மாதம் 13-ம் தேதி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் படத்தின் டீசர் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: February 12, 2019, 5:33 PM IST
என்.ஜி.கே டீசரை வெளியிடுவது இவர்தான் - படக்குழு அறிவிப்பு
என்.ஜி.கே. பட போஸ்டர்
news18
Updated: February 12, 2019, 5:33 PM IST
என்.ஜி.கே டீசர் குறித்த முக்கிய அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது

இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் படம் என்.ஜி.கே. இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

நந்த கோபாலன் குமரன் (சுருக்கமாக என்.ஜி.கே.) என்ற இப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2018-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால் படத்தை ரிலீஸ் செய்வது தாமதமானது. சூர்யா - செல்வராகவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்திருந்தது.கடந்த மாதம் 13-ம் தேதி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் படத்தின் டீசர் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிடுவார் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Loading...இறந்த தாத்தாவுக்கு சடங்கு செய்வதில் நடந்த மோதலில் பாட்டி கொலை - வீடியோ

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...