காதலர் தினத்தன்று டபுள் ட்ரீட் கொடுக்கும் கார்த்தி - சூர்யா

பிப்ரவரி 14-ம் தேதி திரைக்கு வர இருக்கும் தேவ் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது

news18
Updated: February 11, 2019, 5:02 PM IST
காதலர் தினத்தன்று டபுள் ட்ரீட் கொடுக்கும் கார்த்தி - சூர்யா
சூர்யா மற்றும் கார்த்தி
news18
Updated: February 11, 2019, 5:02 PM IST
‘தேவ்’ படம் திரையிடப்படும் திரையரங்குகளில் என்.ஜி.கே டீசரையும் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்திருக்கும் படம் தேவ். இந்தப் படத்தில் தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்குப் பிறகு நடிகை ரகுல் ப்ரீத் சிங் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் நடிகர் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ரேணுகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கியுள்ளார்.

காதலர் தினத்தன்று திரைக்கு வரவுள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தேவ் படம் ரிலீசாகும் பிப்ரவரி 14-ம் தேதி சூர்யாவின் என்.ஜி.கே பட டீசரும் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


ரசிகர்கள் டீசரை வரவேற்க இப்போதே தயாராகிவிட்ட நிலையில் ’தேவ்’ படம் திரையிடப்படும் திரையரங்குகளில் என்.ஜி.கே பட டீசரையும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



எனவே சூர்யா, கார்த்தி ரசிகர்களுக்கு இந்த தகவல் டபுள் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

‘வர்மா’ பட விவகாரம் தமிழ் சினிமாவில் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையேயான உறவை பற்றி, இயக்குநர் வசந்தபாலனிடம் நமது செய்தியாளர் செல்வகுமார் கண்ட விறுவிறு பேட்டி - வீடியோ

First published: February 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...