• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் - பின்னணி என்ன?

லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் - பின்னணி என்ன?

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

வேலைக்காரன் பெரும் கடனாளியாக்க, அயலான் படத்தை நகர்த்த முடியாத சூழல் உருவானது. கடனை அடைக்க வெளிக்கம்பெனிகளில் சிவகார்த்திகேயன் நடிக்க ஆரம்பித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிவகார்த்திகேயன் லைகா தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கயிருக்கிறார் என்ற செய்தி திரையுலகை சுற்றி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டாக்டர் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நெல்சன் இதனை இயக்கியுள்ளார். அக்டோபர் 9 சனிக்கிழமை படம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், அதற்கு முதல்நாள் படத்தை வெளியிட  பஞ்சாயத்து நடந்தது. பல கடன்களை செட்டில் செய்தால் மட்டுமே படத்தை வெளியிட முடியும் என்ற நிலை. சிவகார்த்திகேயன் பல கோடிகளுக்கு பொறுப்பேற்றும் மேலும் பல கோடிகள் தர வேண்டி இருந்தது.

இந்நிலையில் லைகாவை தொடர்பு கொண்டு தனது நிலையை விளக்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். லைகா தமிழகப் பிரிவு நிர்வாகி சுபாஸ்கரனிடம் பேச, அவரோ, சிவகார்த்திகேயனின் டாக்டர் வெளிவர என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் என்று பணித்திருக்கிறார். விடியம்வரை நடந்த பேச்சுவார்த்தையில் லைகா பல கடன்களுக்கு பொறுப்பேற்க, விஷயம் சுமூகமாக முடிந்து, திட்டமிட்டபடி அக்டோபர் 9 படம் வெளியானது.

பொதுவாக இதுபோன்று உதவி செய்தால் படம் நடித்து கடனை தட்டிக் கழிப்பதுதான் வழக்கம். ஆகவே லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதி என்ற அடிப்படையில் இப்படியொரு செய்தியை திரையுலகினர் பரப்பி வருகின்றனர்

ஆரம்பத்தில் தனக்கு சிறிது மார்க்கெட் வந்ததும், தனது நண்பர் ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுயோஸுக்கு மட்டும் கால்ஷீட் தர ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். கிட்டத்தட்ட அது சிவகார்த்திகேயனின் சொந்த கம்பெனி போல. ரெமோ, வேலைக்காரன், சீம ராஜா, அயலான் எல்லாம் ராஜாவின் தயாரிப்புதான்.

Also read... விஜய் 67 படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் இவர்களா?

இதில் வேலைக்காரன் பெரும் கடனாளியாக்க, அயலான் படத்தை நகர்த்த முடியாத சூழல் உருவானது. கடனை அடைக்க வெளிக்கம்பெனிகளில் சிவகார்த்திகேயன் நடிக்க ஆரம்பித்தார். அயலானுக்குப் பிறகு ஆரம்பித்த டாக்டர் வெளியாகிவிட்டது. அதையடுத்து தொடங்கிய டான் படமும் முடிந்துவிட்டது. இன்னும் அயலான் நிலைதான் தெரியவில்லை

அகலக்கால் வைப்பது எத்தனை ஆபத்து என்பதற்கு சிவகார்த்திகேயனும், அயலானும் நிகழ்கால உதாரணங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: