திருமணம் முடிந்த கையுடன் நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருப்பதிக்கு சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்கின்றனர்.
தமிழ் நட்சத்திரங்களான விக்னேஷ் சிவன் நயன்தாரா ஆகியோர் நேற்று காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தங்களுடைய திருமணத்தை திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் அங்கு வருவது சிரமம் என்ற காரணத்தால் சென்னை மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கள் திருமணத்தை நேற்று நடத்தினர்.
இந்த நிலையில் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று திருப்பதி சென்றுள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் வெங்கடாஜலபதி சாமியை அவர்கள் இருவரும் தரிசிக்க உள்ளனர்.
இந்த நட்சத்திர ஜோடி திருமணத்திற்கு முன்பும் பல முக்கிய தருணங்களில் திருப்பதிக்குச் சென்று வெங்கடாஜலபதியை தரிசிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். திருப்பதி மீது தீவிர அன்பு கொண்ட இவர்கள் தற்போது தங்கள் திருமணம் முடிந்தவுடன் கோவிலுக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெளியீட்டிற்கு முன்பும் வெளியீட்டிற்கு பின்பும் இரண்டு முறை அந்தக் கோவிலுக்குச் சென்று வந்திருந்தனர்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.