ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகை பூர்ணாவுக்கு பல கோடி மதிப்பிலான பரிசுகளை வழங்கிய கணவர்

நடிகை பூர்ணாவுக்கு பல கோடி மதிப்பிலான பரிசுகளை வழங்கிய கணவர்

கணவருடன் பூர்ணா

கணவருடன் பூர்ணா

ஷானித் அவருக்கு ரூ.25 கோடி மதிப்பிலான ஆடம்பர வீட்டை பரிசாக அளித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட நடிகை பூர்ணாவுக்கு பல கோடி மதிப்பிலான பொருட்களை அவரது கணவர் பரிசளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நடிகை ஷம்னா காசிம் தனது திரைப் பெயரான பூர்ணா என அறியப்பட்டவர். இவர் துபாயைச் சேர்ந்த ஜேபிஎஸ் குழும நிறுவனங்களின் தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலியை அக்டோபர் 24-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு திருமண செய்தியை உறுதிப்படுத்தினார். திருமணத்தின் போது, தனது கணவரிடமிருந்து ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த பரிசுகளை பூர்ணா பெற்றது தான் தற்போதைய லேட்டஸ்ட் டாபிக்.

    ஷம்னாவுக்கு ஆடம்பரமான பரிசுகளை வழங்கி திருமண விழாவை ஷானித் சிறப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், பூர்ணாவுக்கு கிடைத்த பரிசுகளில் 2700 கிராம் தங்கமும் அடங்கும். இந்த தங்கத்தின் விலை ரூ.1.30 கோடி என கூறப்படுகிறது. பட்டியல் இத்துடன் முடிவடையவில்லை.

    பிறந்தநாளை ஒருநாளில் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை - கமல் ஹாசன்

    மேலும் ஷானித் அவருக்கு ரூ.25 கோடி மதிப்பிலான ஆடம்பர வீட்டை பரிசாக அளித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனுடன், ஒரு புத்தம் புதிய கார் மற்றும் சில நிறுவனங்களின் பங்குகளின் உரிமைகளை ஷானித் வழங்கியுள்ளாராம். இந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.30 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema