தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா கேரளாவில் 2 வாரத்திற்கு தங்கியிருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நயன்தாரா தனது நீண்ட நாள் காதலர் விக்னேஷ் சிவனை கடந்த 9-ம்தேதி திருமணம் முடித்தார். மகாபலிபுரத்தில் நடந்த இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, ஷாரூக்கான், இயக்குனர் அட்லீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மறுநாள் திருப்பதிக்கு சென்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி அங்கு சாமி தரிசனத்திற்கு பின்னர் சர்ச்சையில் சிக்கியது. செருப்பை அணிந்து நயன்தாரா சென்றதால், அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர் இதற்காக விக்னேஷ் சிவன் வருத்தம் தெரிவித்தார்.
Also read... சிவாஜி ரசிகர்கள் வியப்பு, வாத்தியார் ரசிகர்கள் கொதிப்பு - அன்றே தொடங்கிய வசூல் போட்டி
கடந்த 11ம் தேதி ஊடகத்தினரை சந்தித்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தொடர்ந்து சினிமாவில் இருப்போம் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இருவரும் நேற்று கொச்சி புறப்பட்டு சென்றார்கள். அங்கு கோயிலில் தரிசனம் செய்த பின்னர், இருவரும் நயன்தாரா பூர்வீக ஊரான திருவல்லாவுக்கு சென்று அங்கு பெற்றோரின் ஆசியைப் பெற்றுக் கொண்டனர்.
இன்னும் 2 வாரங்களுக்கு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கேரளாவில் தங்கியருப்பார்கள் என்றும், கேரள ஊடகத்தினரை அவர்கள் சந்தித்து பேசுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க - ரோலக்ஸாக மாற்றிய மேக்அப் – டிசைனருக்கு நன்றி தெரிவித்த சூர்யா… வைரலாகும் பதிவு
பின்னர் சென்னை திரும்பும் இருவரும் திரைப்படங்களில் முழு கவனம் செலுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.
அஜித் நடிக்கும் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் சிரஞ்சீவியுடன் காட்ஃபாதர், இந்தியில் ஷாரூக்கானுடன் ஜவான் ஆகிய படங்களில் பிஸியாக உள்ளார் நயன்தாரா.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.