Home /News /entertainment /

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கின் புதிய அப்டேட்ஸ்

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கின் புதிய அப்டேட்ஸ்

விக்ரம் வேதா இந்தி ரீமேக்

விக்ரம் வேதா இந்தி ரீமேக்

சைஃப் அலிகான் நடித்து வரும் இந்த இரண்டாவது ஷெட்யூல்டை தொடர்ந்து அவரும், ஹிர்த்திக் ரோஷனும் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்க உள்ளனர்.

2017-ல் தமிழில் வெளியான விக்ரம் வேதாவை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்கள். 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் மாதவன் நடித்த என்கவுண்டர் போலீஸ் வேடத்தில் சைஃப் அலிகானும், தாதா வேடத்தில் ஹிர்த்திக் ரோஷனும் நடிக்கின்றனர். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு அபுதாபியில் தொடங்கியது. ஹிர்த்திக் ரோஷன் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்கினர். இந்த முதல் ஷெயட்யூல்ட் முடிந்த நிலையில் இப்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பை லக்னோவில் தொடங்கியுள்ளனர். இதில் சைஃப் அலிகான் நடித்து வருகிறார்.

தமிழில் விக்ரம் வேதாவை எடுத்த புஷ்கர் - காயத்ரியே இந்தியிலும் படத்தை ரீமேக் செய்கின்றனர். தமிழில் சென்னைதான் பிரதான கதைக்களம். இந்தியில் வெளிநாடுகளையும் உள்ளடக்கியது போல் கதையில் மாற்றங்கள் செய்துள்ளனர். தமிழில் விஜய் சேதுபதி உள்ளூர் தாதா. இந்தியில் ஹிர்த்திக் ரோஷன் சர்வதேச தாதா. இதேபோல் இந்தியின் பிரமாண்ட சந்தைக்கு ஏற்றபடி பல மாறுதல்கள் கதையில் செய்யப்பட்டுள்ளது.

தமிழில் விக்ரம் வேதாவை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தயாரித்திருந்தார். இந்தியில் இயக்குனர் நீரஜ் பாண்டேயின் ப்ரைடே பிலிம் வொர்க்ஸுடன் இணைந்து, சஷிகாந்தின் ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

மேலும் பார்க்க - ஆர்ஆர்ஆர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..

சைஃப் அலி கான் நடித்து வரும் இந்த இரண்டாவது ஷெட்யூல்டை தொடர்ந்து அவரும், ஹிர்த்திக் ரோஷனும் இணைந்து நடிக்கும் காட்சிகளை படமாக்க உள்ளனர். கடந்த 19 வருடங்களில் இப்போது தான் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது முக்கியமானது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Tamil Cinema

அடுத்த செய்தி