ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தை நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வசனகர்த்தா தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வசனங்கள் பெரிய அளவில் பாராட்டப்பட்டன. அந்தப் படத்திற்கு அருண்ராஜா காமராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்து என்பவர் வசனம் எழுதியிருந்தார்.
இவர் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ் சினிமாவின் இளம் நடிகரான ஹரிஷ் கல்யாண் தற்போது அடங்காதே படத்தின் இயகுநர் சண்முகம் முத்துசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கான வேலைகள் முடிவடைந்ததும் தமிழரசன் பச்சமுத்து படத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.
Also read... இரவின் நிழல் இசை வெளியீட்டு விழாவில் வேதனையுடன் பேசிய பார்த்திபன்
அந்த திரைப்படத்தை சிங்கம் 2, தேவ் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்காக நெஞ்சுக்கு நீதி படத்தின் நாயகன் உதயநிதி, இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Harish kalyan