Soori: சூரி வீட்டில் புதுவரவு - இரட்டை குட்டி பாப்பாக்களால் வந்த மகிழ்ச்சி!

சூரி

தன் வீட்டுக்கு வந்திருக்கும் இரட்டை குட்டி பாப்பாக்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூரி.

  • Share this:
    தன் வீட்டுக்கு வந்திருக்கும் புது வரவான குட்டிப்பாப்பாக்களை அறிமுகம் செய்திருக்கிறார் நடிகர் சூரி.

    பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் நடிகர் சூரி. தற்போது வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். அதோடு ரஜினி நடித்திருக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் காமெடியனாகவும் நடித்துள்ளார்.

    சில தினங்களுக்கு முன்னர், தான் தடுப்பூசி போட்டுக் கொண்ட வீடியோவைப் பகிர்ந்துக் கொண்ட சூரி, அதில் ஊசி போட்டு முடிந்ததும், தனது கட்டைவிரலைக் காட்டினார். பின்னர் சமூக வலைதளங்களில் அந்த வீடியோவைப் பகிர்ந்த அவர், ”இன்னைக்கு நானும் என் மனைவியும், பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க” என அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.



    இந்நிலையில் தன் வீட்டுக்கு வந்திருக்கும் இரட்டை குட்டி பாப்பாக்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூரி. அவருக்கு ஒரு மகளும், மகனும் இருக்கிறார்கள், மீண்டும் இரட்டை குழந்தைகளா என நினைக்காதீர்கள். குட்டி பாப்பா எனக் குறிப்பிட்டது, தன் வீட்டில் வளர்க்கும் புறா பொரித்துள்ள இரட்டை குஞ்சுகளை தான். இதன் வீடியோவையும் சூரி தனது யூ-ட்யூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு கொரோனா விழிப்புணர்வையும் அதில் ஏற்படுத்தியிருக்கிறார்கள் சூரியின் குழந்தைகள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: