சிவா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட்!

ரஜினி மற்றும் இயக்குநர் சிவா

அண்ணாத்த படத்தின் ஒருசில காட்சிகள் கொல்கத்தாவில் படமாக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. தற்போது அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இயக்குனர் சிவாவுக்கு இன்று பிறந்தநாள். திரைபிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், அண்ணாத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாத்தயின் படப்பிடிப்பை ராமேஜிராவ் பிலிம்சிட்டியில் பெருமளவு நடத்தினர். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், சென்னையில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு ரஜினிகாந்த் டப்பிங் பேசினார். அவரைத் தொடர்ந்து நடிகர் சதீஷ், நடிகை மீனா ஆகியோரும் டப்பிங் பேசினர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அண்ணாத்த படத்தின் ஒருசில காட்சிகள் கொல்கத்தாவில் படமாக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. தற்போது அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. லக்னோ மற்றும் கொல்கத்தாவில் சில தினங்கள் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. ரஜினி இதில் கலந்து கொள்ள மாட்டார் என தெரிகிறது. ஆகஸ்ட் 20 க்குள் இந்தப் படப்பிடிப்பு முடிந்துவிடும், அத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என கூறப்படுகிறது.

Also read... அமேசான் பிரைம் செய்த தவறும், சரியும்...!

அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சதீஷ், உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். டி.இமான் இசை. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 திரையரங்குகளில் படம் வெளியாகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: