Home /News /entertainment /

நயன்தாரா – விக்னேஷ் சிவன் விரைவில் திருமணம்… வைரலாகும் புதிய தகவல்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் விரைவில் திருமணம்… வைரலாகும் புதிய தகவல்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

2015-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

இதற்கு முன்பு பலமுறை விரைவில் திருமணம் என தகவல்கள் பரவினாலும், இந்த முறை கன்ஃபார்ம் என நயன்தாரா, விக்னேஷ் சிவன் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதன்பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கிய சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க - அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பி.வி.சிந்து... இன்ஸ்டாவைக் கலக்கிய வீடியோ

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இந்த வாரம்  திரைக்கு வரவுள்ளது.

படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திலும் சில பாடல்களை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க - காதலோட கடைசி நாள்.. இந்த வலி தேவை தான்! விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு

அடுத்ததாக அஜித் நடிக்கும் படத்தையும் விக்னேஷ் சிவனே இயக்கவுள்ளார். லைகா தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் ஜூன் முதல் வாரத்தில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியுள்ளன.
Published by:Musthak
First published:

Tags: Nayanthara, Vignesh Shivan

அடுத்த செய்தி