Home /News /entertainment /

பிரபாஸ் படத்தில் இணைகிறாரா சூர்யா? புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்…

பிரபாஸ் படத்தில் இணைகிறாரா சூர்யா? புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்…

பிரபாஸ் - சூர்யா

பிரபாஸ் - சூர்யா

ப்ராஜெக்ட் கே படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பிரபாஸ் நடிக்கவுள்ள புதிய படத்தில் சூர்யா இடம்பெறுவார் என தகவல்கள் பரவி உள்ளது. இதன் பின்னணி குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

    பாகுபலி 2 பாகங்களின் மெகா வெற்றியை தொடர்ந்து, இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் நடிகராக பிரபாஸ் மாறியுள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராதே ஷ்யாம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.  இந்த படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு இருந்தாலும் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியது.

    இந்த படத்தை தொடர்ந்து, கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் என்ற படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரும் அளவில் இருந்து வரும் நிலையில், பிராஜெக்ட் கே என்ற புதிய படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார்.

    விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு…

    அட்வென்சர் சயின்ஸ் ஃபிக்சன் ஆக்சன் ஜானரில் இந்த படம் உருவாக உள்ளது. இதனை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கவுள்ளார். இதனை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அமிதாப்பச்சன், திஷா பதானி ஆகியோர் படத்தில்  இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

    ‘அம்மா அப்பாவ பாத்துக்கோங்க… கடைசி காலத்துல கை விட்றாதீங்க..’ – ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்…

    இந்நிலையில் நடிகர் சூர்யா, துல்கர் சல்மான் மற்றும் மகேஷ்பாபு ஆகியோரை சிறப்பு தோற்றத்தில் படத்தில் இடம்பெறச் செய்ய இயக்குனர் நாக் அஸ்வின் முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இவர்களது கேரக்டர்கள் மிகச்சிறிய அளவில் இருந்தாலும், படத்தில் மிக முக்கியமான ஒன்றாக அமையும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான ஆதிபுரூஷ் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளிவரவுள்ளது.
    Published by:Musthak
    First published:

    அடுத்த செய்தி