நாட்படு தேறல் - கவிஞர் வைரமுத்துவின் பிரமாண்ட முயற்சி!

நாட்படு தேறல் - கவிஞர் வைரமுத்துவின் பிரமாண்ட முயற்சி!

வைரமுத்து

வருடம் முழுக்க சாதனையை நோக்கி உழைத்துக் கொண்டிருப்பவர் கவிஞர் வைரமுத்து. சிறந்த கவிஞர் என்பதற்கு பல டஜன் கவிதைத் தொகுப்புகள் வைத்துள்ளார்

 • Share this:
  வருடம் முழுக்க சாதனையை நோக்கி உழைத்துக் கொண்டிருப்பவர் கவிஞர் வைரமுத்து. சிறந்த கவிஞர் என்பதற்கு பல டஜன் கவிதைத் தொகுப்புகள் வைத்துள்ளார். சிறந்த பாடலாசிரியர் என்பதற்கு ஆயிரக்கணக்கான திரைப்பாடல்கள். சிறந்த எழுத்தாளர் என்பதற்கு கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம் உள்பட நாவல்கள், சிறுகதைகள். சிறந்த உரையாசிரியர் என்பதற்கு தமிழற்றுப்படை... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். வைரமுத்துவின் அடுத்த சாதனை நாட்படு தேறல்.

  100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குநர்கள், 100 பாடகர்கள் என்ற திட்டத்தோடு தனது வரிகளில் 100 பாடல்களை உருவாக்குகிறார் வைரமுத்து. இந்த பிரமாண்ட முயற்சியின் முதல் பாடல் ஏப்ரல் 18-ம் தேதி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இசையருவி சானலிலும் இதனை பார்க்கலாம். வாரம் ஒரு பாடல் வீதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதன் தலைப்புப் பாடலை வைரமுத்து நேற்று வெளியிட்டார். அவரது பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூபில் அதனை காணலாம்.

  இந்த தலைப்புப் பாடலுக்கு ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைக்க, சங்கர் மகாதேவன் பாடியுள்ளார். இயக்கம் கார்த்திகேயன்.

  "இதிகாசத்தில் விழுந்த ரத்தம்
  நாட்படு தேறல்
  இலக்கியத்தில் வடிந்த கண்ணீர்
  நாட்படு தேறல்
  அமிழ்தில் ஊறிய ஆதித் தமிழும்
  நாட்படு தேறல்..."
  என வரிகள் எழுதியுள்ளார் வைரமுத்து.

  சாகித்ய அகாதமி விருது பெற்ற வைரமுத்து, ஞானபீட விருது கிடைக்கும்வரை ஓயமாட்டார் என்பதற்கு, மற்றுமொரு உதாரணம் இந்த நாட்படு தேறல் என்கிறார்கள் விமர்சகர்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: