பொது இடத்தில் இப்படியா போஸ் கொடுப்பார்கள்? - நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்

ராதிகா ஆப்தே

பூங்கா போன்ற ஒரு இடத்தில் அரைகுறை ஆடையில் தவளை சிற்பத்துக்கு அருகில், தவளை போலவே போஸ் தந்துள்ளார் ராதிகா ஆப்தே

 • Share this:
  ராதிகா ஆப்தேயின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் போஸ்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

  ராம் கோபால் வர்மாவின் ரத்த சரித்திரத்தில் புடவைகட்டி, நெற்றியில் குங்குமம் வைத்து, பேமிலி லுக்கில் ராதிகா ஆப்தேயை முதல்முதலில் பார்த்தவர்கள் இன்னொரு ஸ்ரீதேவி என்றனர். ஆனால், அடுத்தடுத்தப் படங்களில் கான்ட்ரவர்ஸியான வேடங்களில் நடித்து நான் வேறு ஆள் என்று நிரூபித்தார் ராதிகா ஆப்தே. மேலாடை இன்றி ஒரு படத்தில் தோன்றி சர்ச்சையை கிளப்பினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   
  View this post on Instagram

   

  A post shared by Radhika (@radhikaofficial)


  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூங்கா போன்ற ஒரு இடத்தில் அரைகுறை ஆடையில் தவளை சிற்பத்துக்கு அருகில், தவளை போலவே போஸ் தந்துள்ளார் ராதிகா ஆப்தே. "நாம் எல்லோரும் மிருகங்கள் தான். நான் பார்க்க தவளை போலிருக்கிறேன். நீங்க...?" என்று அந்த போஸ்டில் கேட்டுள்ளார்.

  இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், ராதிகா ஆப்தேயின் கேள்வியை விட்டுவிட்டு, என்ன இப்படி பொது இடத்தில் போஸ் குடுத்திருக்கீங்க என்று கேட்டு வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: