Home /News /entertainment /

வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்ட கரீனா கபூர் - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்ட கரீனா கபூர் - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

கரீனா கபூர்

கரீனா கபூர்

இந்த படத்தை புறக்கணிக்காதீர்கள். இரண்டரை வருடமாக இந்த படத்துக்காக 250 பேர் உழைத்திருக்கிறார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தேவையில்லாமல் வாயை கொடுத்து வம்பில் மாட்டி இருக்கிறார் பாலிவுட் நடிகை கரீனா கபூர்.

    அமீர்கான், கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லால் சிங் சத்தா. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார் கரீனா. அங்கு லால் சிங் சத்தா படம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. தொடர் கேள்விகளால் ஆத்திரமடைந்த கரீனா கபூர், ஒரு கட்டத்தில் ”உங்களை படம் பார்க்கச் சொல்லி யார் கட்டாயப்படுத்தினார்கள்? எங்கள் படங்களை பார்க்க வேண்டாம். நீங்கள் பார்க்காததால் ஒன்றும் மோசமாகி விடாது” என்று கோபமாக கூறினார்.

    அவரின் இந்த கருத்துக்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். ரசிகர்கள் தரப்பிலும் பல விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கரீனா கபூர், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”இந்த படத்தை புறக்கணிக்காதீர்கள். இரண்டரை வருடமாக இந்த படத்துக்காக 250 பேர் உழைத்திருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தை பாருங்கள், ஆதரவு தாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    வில்லனாக களம் இறங்கும் காமெடி நடிகர் மதன் பாப்!



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் கரீனா கபூரின் இந்த இரு வேறு கருத்துகளையும் ஒன்றாக இணைத்து, சமூக வலைதளங்களில் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Kareena kapoor

    அடுத்த செய்தி