ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரஜினி சொன்னதா? 'வாரிசு' விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி காப்பியா? விமர்சிக்கும் ரசிகர்கள்

ரஜினி சொன்னதா? 'வாரிசு' விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி காப்பியா? விமர்சிக்கும் ரசிகர்கள்

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய்

Varisu Vijay இந்த நிலையில் உங்களுடன் போட்டிபோடுங்கள் என விஜய் பேசியதை ரஜினி ஏற்கனவே பேசிவிட்டார் என அவரது ரசிகர்கள் விடியோ பகிர்ந்துவருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

வாரிசு இசை வெளியீட்டு விழா அறிவிக்கப்பட்டதிலிருந்து விஜய் என்ன பேசப்போகிறார், துணிவு படம் வெளியாதையொட்டி அந்தப் படம் குறித்தும் பேசுவாரா என பல்வேறு கேள்விகள் ரசிகர்களைத் துளைத்தெடுத்தன.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை நடந்த இசை வெளியீட்டு விழாவில் தனது ஸ்டைலில் குட்டி கதை சொன்னார் விஜய். அப்போது பேசிய அவர், ''1990களில் எனக்கு ஒரு நடிகர் போட்டியாக இருந்தார். பின்னாளில் என்னுடன் அவர் சீரியஸான போட்டியாளராக மாறினார். அந்த நடிகரின் வெற்றியால் நானும் தொடர்ந்து ஓடினேன்.

அந்த நடிகரை விட அதிக வெற்றிகளைப் பெற வேண்டும் என்று போராடினேன். நமக்கு அப்படிப்பட்ட போட்டியாளர் வேண்டும்'' என்று அவர் பேசிக்கொண்டிருக்க, ஒருவேளை அவரைப் பற்றி சொல்கிறாரா என ரசிகர்கள் யூகிக்க தொடங்கினர். ஆனால், ''அந்த போட்டியாளர் ஜோசப் விஜய். உங்களுடன் போட்டிபோடுங்கள்'' என ரசிகர்களின் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நடிகர் விஜய்யின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் உங்களுடன் போட்டிபோடுங்கள் என விஜய் பேசியதை ரஜினி ஏற்கனவே பேசிவிட்டார் என அவரது ரசிகர்கள் விடியோ பகிர்ந்துவருகின்றனர்.

சாமி படத்தின் வெற்றிவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதைத் தான் அவரது ரசிகர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், ''என்னுடைய படம் தான் எனக்கு எதிரி, என்னுடைய படம் தான் எனக்கு தீர்வு, என் படத்துக்கு நான் போட்டியா இருக்கிறேன். மத்தவங்க படத்துக்கு இல்ல. இப்போ எனக்கு போட்டியாக இருப்பது படையப்பா. அந்தப் படத்தை விட பெரிய ஹிட் கொடுக்கணும்'' என்று பேசியிருந்தார்.

மற்றொரு பக்கம் ஹாலிவுட் நடிகர் மேத்யூ ஆஸ்கர் விருது விழாவில், ''என் வாழ்வில் மிக முக்கிய நபர் உன் ஹீரோ யார் எனக் கேட்டார். அதற்கு நான் எனக்கு தெரியவில்லை. 2 வாரங்களுக்கு பிறகு சொல்கிறேன் என்று அவருக்கு பதிலளித்தேன். இரண்டு வாரங்களுக்கு பிறகு அந்த நபர் என்னிடம் வந்து உன் ஹீரோ யார் என  மீண்டும் கேட்டார்.  அப்பொழுது நான் 10 வருடங்களுக்கு பிறகு நான் என்றேன்.

இதையும் படிக்க | 'படிப்பு இருக்கா? வேலை உண்டு..' சூர்யாவின் அடடே முன்னெடுப்பு.. குவியும் பாராட்டு!

எனக்கு 25 வயதாக இருக்கும்போது அதே நபர் இப்பொழுது நீ ஹீரோவா ? எனக் கேட்டார்.  இல்லை இல்லை, என் ஹீரோ 35 வயதில் இருக்கிறார் என்றேன்.

ஆக என்னோட ஹீரோ எப்பொழுதும் என்னை விட பத்து வயது தொலைவில் இருக்கிறார். என் ஹீரோ போல நான் ஆக மாட்டேன். அந்த இடத்துக்கு எனனால் போக முடியாது. ஆனால் அந்த எண்ணம்தான் எனக்கு உந்து சக்தியாக இருக்கிறது'' என்று தெரிவித்திருந்தார். நடிகர் விஜய் இதனை அடிப்படையாகக் கொண்டு தான் பேசினார் என பதிவிட்டு வருகின்றனர்.

இதனையடுத்து விஜய் ரசிகர்கள் ஒருவேளை அவர் நடிகர்கள் ரஜினிகாந்த் பேசியதையும், மேத்யூ பேசியதையும் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் விஜய்யின் பேச்சு பலருக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறது. விஜய் போன்று வாழ்வில் வெற்றிபெற்றிருக்கும் ஒருவர் மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது முக்கியம் என்று பாராட்டி பேசிவருகின்றனர்.

First published:

Tags: Actor Vijay, Rajinikanth, Varisu