பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என அறிவிக்கப்பட்டுவிடுவார்கள். 21 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்குள் விக்ரமன், ஷிவின், அசீம் ஆகிய 3 பேர் நுழைந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த சீசனின் பிக்பாஸ் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விக்ரமன் இரண்டாம் இடமும், ஷிவினுக்கு 3 ஆம் இடமும் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் சமூக வலைதளங்களில் மக்கள் நாயகன் அசீம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிவருகிறது. மற்றொரு பக்கம் தொகுப்பாளர் கமல்ஹாசனால் பலமுறை கண்டிக்கப்பட்ட ஒரு நபர் எப்படி பிக்பாஸ் வின்னராக அறிவிக்கப்படலாம் எதிர்ப்பும் கிளம்பி வருகின்றன.
இது ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனின் உடை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீல வண்ண பேன்ட்டும், வெள்ளை சட்டையும் அதற்கு மேல் நல வண்ண கோர்ட்டும் அணிந்து படு ஸ்டைலிஷாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரது சட்டையில் வெள்ளை பெயிண்ட் கொட்டியது போல இருப்பதாகவும், காயப்போட்டபோது உடையில் காக்கா எச்சம் போனது போன்று இரு்பதாகவும் ரசிகர்கள் விமர்சித்துவருகிறார்கள். இதில் ஹைலைட்டாக ரசிகர் ஒருவர், பிக்பாஸில் அசீம் வின்னர் ஆனதற்கு தன் எதிர்ப்பைக் குறியீடாக உணர்த்தும் வண்ணமே காக்கா எச்சம் போன டிசைனில் ஒரு சட்டை பேண்ட்டைக் கமல் அணிந்திருக்கிறார் என குறிப்பிட்டிருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 6, Kamal Haasan