விஜய் நடித்துள்ள வாரிசு படத்திலிருந்து தமன் இசையில் வெளியான தீ தளபதி பாடல் அனிருத் பாடலின் காப்பி என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.
தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆக்ஷன், எமோஷன், ரொமான்ஸ், பொழுதுபோக்குடன் கூடிய இந்தப் படம் டிசம்பர் 5-ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷனுக்கு செல்லும் என்று கூறப்பட்டது. அதோடு தொழில்நுட்பக் குழுவினர் லடாக்கிற்கும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சில மான்டேஜ் காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.
வாரிசு திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டனர். முன்னதாக வாரிசு படத்திலிருந்து முதல் பாடலாக ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி யூ டியூபில் 75 மில்லியன் வியூஸ்களை கடந்தது. பாடலை விஜய்யும், மானசியும் பாட பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்தார்.
Also read... சிவப்பு நிற உடையில் வேற லெவல் போட்டோஸ் வெளியிட்ட நடிகை ஹூமா குரேசி - வைரல் போட்டோஸ்!
இந்நிலையில் நேற்று படத்தின் இரண்டாவது பாடலான ‘தீ தளபதி’ பாடல் வெளியானது. அதில் 30 வருடங்களை நிறைவு செய்திருக்கும் விஜய்க்கு இந்தப் பாடல் சமர்ப்பிக்கப்படுவதாக படக்குழு தெரிவித்திருந்தது. ரசிகர்கள் கொண்டாடிய இந்த பாடல் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. என்னவென்றால் இந்த பாடல் காப்பியடித்து போடப்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
Athu thee thalapathy illa
Ani oda varava varava Nan thiruppi varva song oda copy#Thunivu #Ajithkumar #THUNIVURulingInternet pic.twitter.com/MIHVWXtNgV
— Sober style (@Soberguru) December 4, 2022
அனிருத் இசையில் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற 'வரவா வரவா' பாடலை காப்பியடித்து தீ தளபதி இசையமைக்கப்பட்டுள்ளது என்று கூறி வருகிறது. மேலும், நான் ஈ படத்தில் வரும் 'ஈ டா ஈ டா' பாடலையும் சேர்ந்த கலவை தான் தீ தளபதி என்றும் கிண்டல் செய்து வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vijay, Anirudh