ஆபாச படத்தை வெளியிடுவேன்... மிரட்டிய நபரை அடையாளம் காட்டி அதிரடி அறிக்கை வெளியிட்ட நமீதா!

ஆபாச படத்தை வெளியிடுவேன்... மிரட்டிய நபரை அடையாளம் காட்டி அதிரடி அறிக்கை வெளியிட்ட நமீதா!
நடிகை நமிதா
  • Share this:
ஆபாசமாக மிரட்டி மெசேஜ் அனுப்பிய நபரின் முகத்தை வெளியிட்டிருக்கும் நடிகை நமீதா அதிரடியான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்ட நமீதா சமீபத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில் தன்னை சமூகவலைதளத்தில் ஆபாசமாக மிரட்டிய நபரின் புகைப்படத்தை வெளியிட்டு நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கும் நமீதா, “இவர் மலிவான மனநிலை கொண்டவர். இவர், இன்ஸ்டாகிராமில் தனிப்பட்ட முறையில் என்னுடைய பெயரை அழைத்து எனக்கு மெசேஜ் செய்தார். அவருடைய பெயரை அவருடைய இன்ஸ்டாகிராம் ஐ.டியின் மூலம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அவர், என்னை அழைக்கும் போதே ஹாய்... ஐட்டம்.. இதுகுறித்து நான் அவரிடம் கேட்டபோது, என்னுடைய இன்ஸ்டாகிராம் ஐ.டி ஹேக் செய்யப்பட்டது என்று கூறினார்.


நான் தொடர்ந்து இதுகுறித்து கேட்டபோது, என்னுடைய பார்ன் படங்களைப் பார்த்துள்ளதாக கூறினார். அதனை, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்போவதாக கூறினார். அதைச் செய் என்று நான் கூறினேன். இதுதான் மலிவான எண்ணம் கொண்ட தோல்வியாளனின் முகம்.

எந்தப் பெண்களையும் ஆபாசமான பெயர்களில் அழைக்கும் உரிமை உள்ளது என்று கருதும் இழிவான மனிதன். எதற்காக நான் இதைக் கேட்க வேண்டும்... ஏனென்றால் நான் ஊடகத்துறையில் இருக்கிறேன். ஏனென்றால் நான் கவர்ச்சித் துறையில் இருக்கிறேன்.

நான் ஒரு மனிதராக எப்படி என்று உனக்குத் தெரியும் என்று நீ நினைக்கிறாய்.. என்னுடைய பலவீனத்தால் நான் அமைதியாக இருக்கிறேன் என்று தவறாக எண்ண வேண்டாம். ஒரு பெண் எந்த ஒரு பாதையில் இருந்து வந்தாலும் அந்தப் பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என்பது உண்மையான ஆண்களுக்குத் தெரியும்.தன்னுடைய அம்மாவை யாரேனும் கலங்கப்படுத்தினால் தனக்கு எப்படி உணர்வு இருக்கும் என்று நல்ல ஆணுக்குத் தெரியும். பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதற்குப் பதிலாக துர்கா கடவுளை வணங்குவதற்கு பதிலாக, நவராத்தியைக் கொண்டாடுவதற்கு பதிலாக உன்னுடைய பொதுவாழ்க்கையில் பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்” இவ்வாறு நடிகை நமீதா தனது பதிவில் கூறியுள்ளார்.



 




View this post on Instagram




 

Hi all, this one cheap minded, free loser has been calling me names in DM. As you can read he is @i_am_thamizh_senthamizh . He started with name calling like 'Hi Item' . Hence , when I confronted him , he said his account got hacked !!! And when I pursued him, he said he has seen my so called 'PORN' and he's going to publish it online now !!! Knowing the facts, I said pls 'Go ahead '.. See this face people ! This is the face of a Loser, a Cheap minded , Filthy person, who thinks he has Right to call any Woman, with any cheap and dirty names,just because he thinks He Can !!!! Why should I listen to this ?! Just because I'm in Media ?! Just because I'm in a Glamour Industry?! You think you know me ?! You think you know who I'm as a person ??! DO NOT MISTAKE MY SILENCE FOR MY WEAKNESS !! A Real Man knows how to Respect a Woman, Any Woman from Any path of Life, for he knows how it feels if someone will Disrespect his own Mother! Instead of Celebrating Navratri where you pray to Godess Durga for 9 days and instead of Celebrating Women's Day, learn to respect women in your General Life. Because that's what matters at the End of the Day!!


A post shared by Namitha Vankawala Chowdhary (@namita.official) on






மேலும் படிக்க:இந்தியன் 2 விபத்து - போலீஸ் துன்புறுத்துவதாக கமல் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading