Home /News /entertainment /

திருப்தியில்லை... பாகுபலி வெப் தொடரை கைவிட்ட நெட்பிளிக்ஸ்!

திருப்தியில்லை... பாகுபலி வெப் தொடரை கைவிட்ட நெட்பிளிக்ஸ்!

நெட்ஃப்ளிக்ஸ்

நெட்ஃப்ளிக்ஸ்

Baahubali: இந்தியாவில் இந்து சென்டிமெண்டுடன் படத்தையும், தொடரையும் எடுக்காதவரை நெட்பிளிக்ஸுக்கு இந்தியாவில் வெற்றி கிடைக்கப் போவதில்லை என சில ஆன்மிக விமர்சகர்கள் சாபமிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
நெட்பிளிக்ஸின் சிஇஓ ரீட் ஹாஸ்டிங் சில தினங்கள் முன்பு, இந்தியாவில் வெற்றிகரமாக இயங்க முடியாதது குறித்து அதனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் நெட்பிளிக்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கவிருந்த பாகுபலி வெப் தொடரை, திருப்தியில்லை என கைவிட்டிருக்கிறார்கள்.

இன்றைய தேதியில் ஓடிடியின் உலக தாதா என்றால் அது நெட்பிளிக்ஸ்தான். பில்லியன் கணக்கில் டாலர்களை கொட்டி விளையாடுகிறார்கள். 2011 லிருந்து 2021 வரை இவர்கள்தான் ராஜாவாக இருந்தார்கள். இந்த காலகட்டத்தில் இவர்களின் ஸ்டாக் வேல்யூ 6000 சதவீதம் உயர்ந்தது.

20 கோடி சந்தாதாரர்கள் கிடைத்தனர். இந்த வளர்ச்சி 2021 க்குப் பிறகு கீழிறங்கியது. நெட்பிளிக்ஸின் ஷேர் வேல்யூ 397.50 டாலர்களிலிருந்து 27 சதவீதம் குறைந்தது. அதாவது 110.75 டாலர்களை இழந்தது. இதனால், நெட்பிளிக்ஸில் முதலீடு செய்தவர்கள் பல பில்லியன் டாலர்களை இழந்தனர்.

2021 இல் நெட்பிளிக்ஸால் 1.82 கோடிசந்தாதாரர்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இது 2020 ஐ விட 50 சதவீதம் குறைவு. 2022 இல் இது மேலும் அடிவாங்கத் தொடங்கியது. குறிப்பாக இந்தியாவில் நெட்பிளிக்ஸுக்கு அதிரடியான வெற்றி இதுவரை கிடைக்கவில்லை. இந்திய சந்தையை தலைகீழாக புரட்டிவிட்டு, காசை குறைத்தால் காரியம் நடக்கும் என சந்தா கட்டணத்தை பெருமளவு குறைத்தனர். மாதம் 499 ரூபாய் என்றிருந்ததை 199 ரூபாய் என குறைத்தும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு உயரவில்லை.

இப்படியொரு சூழலில்தான் சுமார் 150 கோடிகளில் தயாரிப்பதாக இருந்த பாகுபலி வெப் தொடரை நெட்பிளிக்ஸ் கைவிட்டுள்ளது. இது பாகுபலி முதல் பாகத்துக்கு முன்பு நடக்கும் கதை. இதுவரை எழுதப்பட்ட கதையிலும், அதற்கான தயாரிப்பிலும் நெட்பிளிக்ஸுக்கு திருப்தியில்லை என்பதால், தொடரையே கைவிட்டுள்ளனர். இந்தத் தொடருக்காக அவர்கள் செலவளித்த பல கோடிகள் வீணாகியுள்ளன.

Also read... மன்மத லீலை டைட்டிலுக்காக தொடரும் வார்த்தைப் போர்...!

இந்தியாவில் இந்து சென்டிமெண்டுடன் படத்தையும், தொடரையும் எடுக்காதவரை நெட்பிளிக்ஸுக்கு இந்தியாவில் வெற்றி கிடைக்கப் போவதில்லை என சில ஆன்மிக விமர்சகர்கள் சாபமிட்டுள்ளனர். விரைவில் நெட்பிளிக்ஸும் புராண, இதிகாசங்களில் தனது எதிர்காலத்தை தேடுகிற நிலை ஏற்படலாம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Baahubali, Netflix

அடுத்த செய்தி