தென் கொரியாவில் தயாரான ஸ்குயிட் கேம் வெப் தொடரை தமிழ், தெலுங்கில் 'டப்' செய்து வெளியிட்டுள்ளது நெட்பிளிக்ஸ்.
வியாபாரம் செய்ய வெளிநாட்டுக்காரர்களிடம் தான் படிக்க வேண்டும். தங்களின் படைப்பை மொழி, கலாசாரம் எதுவும் அறியாத இன்னொரு இனத்திடம் கொண்டு சேர்ப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய அவர்கள் தயங்குவதில்லை.
செப்டம்பர் 17 வெளியான ஸ்குயிட் கேம் சில தினங்களிலேயே சுனாமியாக பார்வையாளர்களை சுருட்டியது. 90 நாடுகளில் இந்த வெப் தொடர் முதலிடத்தைப் பிடித்தது. இத்தனைக்கும் கொரிய மொழியில் தயாரான வெப் தொடர் இது. குறுகிய காலத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற வெப் தொடரும் இதுவே. இந்தியாவிலும் இந்தத் தொடர் ஹிட்டானது. ஆனால், இன்னும் அதிக பார்வையாளர்களை சென்று சேரும்வகையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தத் தொடரை 'டப்' செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இந்தியில் ஏற்கனவே பார்க்கக் கிடைக்கிறது.
also read : அன்றும்.. இன்றும்.. எடை குறைப்பு பற்றி மோட்டிவேட் செய்யும் குஷ்பு..
வெப் தொடர்களை 'டப்' செய்வதன் மூலம் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 2012 இல் இருந்தே நெட்பிளிக்ஸுக்கு அதிகரித்து வருகிறது. இது இப்போது 120 சதவீதமாக உயர்ந்துள்ளது என்கிறார்கள். ஏறக்குறைய 35 மொழிகளில் நெட்பிளிக்ஸ் தனது தொடர்களை 'டப்' செய்து வெளியிடுகிறது. இந்தியாவில் இந்தி பேசுகிறவர்களுக்கு இணையாக தமிழ், தெலுங்கு பார்வையாளர்கள் இருப்பதால் புகழ்பெற்ற வெப் தொடர்களை தமிழ், தெலுங்கிலும்,நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறது. டிசம்பர் 3 வெளியான மணி ஹெய்ஸ்ட் 5 வால்யூம் 2 கூட தமிழில் பார்க்கக் கிடைக்கிறது.
ஸ்குயிட் கேமின் அபிரிதமான வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீஸனை தயாரிக்கிறார்கள். இப்போது போல் தாமதிக்காமல், இரண்டாவது சீஸன் வெளியாகும் போதே, தமிழ், தெலுங்கிலும் அதனை வெளியிட உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.