Home /News /entertainment /

நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ரெட் நோட்டீஸ் படத்தின் இரண்டு பாகங்கள்!

நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ரெட் நோட்டீஸ் படத்தின் இரண்டு பாகங்கள்!

ரெட் நோட்டீஸ்

ரெட் நோட்டீஸ்

நெட்பிளிக்ஸின் ஒரிஜினல் திரைப்படங்களில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் நெட்பிளிக்ஸ். மூன்று முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் மட்டுமே 60 மில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
நெட்பிளிக்ஸில் வெளியான ரெட் நோட்டீஸ் படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களை நெட்பிளிக்ஸ் தயாரிக்க உள்ளது.

நெட்பிளிக்ஸ் படங்களை வாங்கி வெளியிடுவதுடன் சொந்தமாகவும் படங்கள் தயாரிக்கிறது. ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ட்வைனி ஜான்சன், ரேயன் ரெனால்ட்ஸ், கல் கேடெட் ஆகியோர் நடிப்பில் நெட்பிளிக்ஸ் தயாரித்த படம் ரெட் நோட்டீஸ். அரிய கலைப்பொருள் திருட்டைப் பற்றிய இந்தப் படத்தை நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாக எடுத்திருந்தனர். படம் சுமார் என்றாலும் உலக அளவில் பெரும்பாலானவர்கள் படத்தைப் பார்த்ததால் நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் திரைப்படங்களில் அதிகம் பேர் பார்த்த ஹிட் திரைப்படமானது ரெட் நோட்டீஸ். இதன் காரணமாக இதன் சீக்வெலை எடுக்க தீர்மானித்துள்ளனர். அதுவும் இரண்டு சீக்வெல்கள்.

ரெட் நோட்டீஸை இயக்கிய ரவ்சன் மார்ஷர் தர்பர் ரெட் நோட்டீஸ் இரண்டு, மூன்று பாகங்களையும் இயக்குகிறார். இரண்டாவது பாகம் அடுத்த வருடம் 2023 இல் வெளியாகும் எனத் தெரிகிறது. மூன்றாவது பாகத்தை அதற்கு அடுத்த வருடம் 2014 இல் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த பாகங்களில் வேறு சில முக்கிய நடிகர்களையும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். திருட்டை மையப்படுத்திய ஓசோன்ஸ் பட சீரிஸைப் போல இந்தப் படங்கள் தயாராக உள்ளன.

Also read... பிளான் பண்ணி நடிகரான இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்...!

நெட்பிளிக்ஸின் ஒரிஜினல் திரைப்படங்களில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் நெட்பிளிக்ஸ். மூன்று முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் மட்டுமே 60 மில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது. மொத்தமாக 250 மில்லியன் டாலர்கள் செலவளிக்கப்பட்டுள்ளது.

Also read... மார்க் ஆண்டனி படத்தில் இணைந்த இசை அசுரன்...!

விரைவில் வெளியாகவிருக்கும் நெட்பிளிக்ஸின் தி க்ரே மேன் திரைப்படம் இதைவிட அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் தனுஷ் பிரதான வேடத்தில் நடித்திருப்பது முக்கியமானது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Netflix

அடுத்த செய்தி