Home /News /entertainment /

ஓடிடி-யில் சூர்யவன்ஷி - 100 கோடி தந்த நெட்பிளிக்ஸ்!

ஓடிடி-யில் சூர்யவன்ஷி - 100 கோடி தந்த நெட்பிளிக்ஸ்!

அக்‌ஷய் குமார்

அக்‌ஷய் குமார்

சூர்யவன்ஷி திரையரங்கில் வெளியாகி 8 வாரங்கள் கடந்த பிறகு நெட்பிளிக்ஸில் வெளியிட ஒப்பந்தம் செய்திருந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
இந்திப் படம் சூர்யவன்ஷி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.

கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் வெளியான இந்திப் படங்கள் எதுவும் பாக்ஸ் ஆபிஸில் சோபிக்கவில்லை. இந்நிலையில் அக்ஷய் குமார் நடிப்பில் சூர்யவன்ஷி திரைப்படம் வெளியானது. இந்தியின் கமர்ஷியல் கிங் என்றழைக்கப்படும் ரோஹித் ஷெட்டி இதனை இயக்கியிருந்தார். இது அவரது காப் ட்ரையாலஜியில் மூன்றாவது படமாகும்.

ரோஹித் ஷெட்டி தமிழில் வெளியான சிங்கம் படத்தை அதே பெயரில் அஜய் தேவ்கானை வைத்து இந்தியில் ரீமேக் செய்தார். படம் ஹிட்டானது. அதையடுத்து தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தை (தமிழில் அயோக்யா) இந்தியில் சிம்பா என்ற பெயரில் ரீமேக் செய்தார். ரன்வீர் சிங் நடித்த இந்தப் படமும் ஹிட்டானது. இரண்டு போலீஸ் கதைகள் எடுத்த நிலையில் மூன்றாவதாக அக்ஷய் குமாரை வைத்து அவர் இயக்கியது சூர்யவன்ஷி.

நவம்பர் 5 ஆம் தேதி படம் வெளியானது. ரோஹித் ஷெட்டி தனது சிங்கம், சிம்பா படங்களின் நாயகர்களையும் இதில் கௌரவ வேடத்தில் நடிக்க வைத்து படத்தின் மைலேஜை எகிற வைத்திருந்தார். முதல் நாளிலிருந்து படம் நல்ல வசூலைப் பெற்றது. கடந்த புதன்கிழமை வரை படத்தின் இந்திய திரையரங்கு வசூல் 190.88 கோடிகள். இந்த வாரத்தில் 200 கோடிகளைத் தாண்டும். கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் இந்தி திரையுலகுக்கு கிடைத்த முதல் கமர்ஷியல் ஹிட் இந்தப் படம்.

சூர்யவன்ஷி திரையரங்கில் வெளியாகி 8 வாரங்கள் கடந்த பிறகு நெட்பிளிக்ஸில் வெளியிட ஒப்பந்தம் செய்திருந்தனர். 75 கோடிகள் இதற்காக நெட்பிளிக்ஸ் தருவதாக இருந்தது. இப்போது ஒரே மாதத்தில் படத்தை நெட்பிளிக்ஸில் வெளியிட்டதால் 100 கோடிகளை நெட்பிளிக்ஸ் தந்திருப்பதாக ட்ரேட் அனலிஸ்டுகள் கூறுகின்றனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Netflix

அடுத்த செய்தி