காத்திருப்பு முடிந்தது... மனி ஹெய்ஸ்ட் தொடரின் 5-வது சீசன் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மனி ஹெய்ஸ்ட்

நெட்ப்ளிக்ஸில் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற மணி ஹெஸ்ட் தொடரின் 5-வது சீசன் செப்டம்பர் 3-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    சினிமா, இணைய தொடர்கள் ரசிக்கும் சினிமா விரும்பிகளுக்கான புகழிடத்தில் முதலிடத்தில் இருப்பது நெட்ப்ளிக்ஸ் ஓ.டி.டி தளமாகும். நெட்ப்ளிக்ஸைப் பொறுத்தவரை உலக மொழித் திரைப்படங்கள் மட்டுமல்லாது, அத்தளத்துக்கான பிரத்யேக தொடர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் உண்டு. மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் அந்த தொடர்கள் மொழி, நாடு எல்லைகளைக் கடந்து உலக அளவில் பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில், நெட்ப்ளிக்ஸில் 2017-ம் ஆண்டு வெளியான வெளியான மனிஹெய்ஸ்ட் இணைய தொடர் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

    குறிப்பாக, கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு நாள்களில் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் மனிஹெய்ஸ்ட் தொடருக்கு வரவேற்பு கிடைத்தது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வங்கிகளில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களைப் பற்றிய கதைதான் மனிஹெய்ட் தொடர். இதுவரையில், நான்கு சீசன்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு சீசனும் தலா 8 எபிசோடுகளைக் கொண்டது. நான்கு சீசன்களும் எந்த தொய்வும் இன்றி விறுவிறுப்பாக செல்வது இந்த சீசனின் சிறப்பு.

    இந்த இணைய தொடரில் 20-க்கும் மேற்பட்ட முக்கிய கதாப்பாத்திரங்கள் இருந்தாலும், ப்ரோபசர் எனும் எல்லாரையும் வழிநடத்துபவரின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. அந்த கதாபாத்திரம் காவல்துறையிடம் கைதாவது போல 4-வது சீசன் முடிவடைந்ததால் 5-வது சீசனின் மீது மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. உலக அளவில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தநிலையில், மனிஹெய்ஸ்ட்டின் 5-வது சீசனின் முதல் பகுதி செப்டம்பர் 3-ம் தேதியும், இரண்டாம் பகுதி டிசம்பர் 3-ம் தேதியும் வெளியாகும் என்று நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. முந்தைய சீசன்களில் ஒரு சீசனுக்கு 8 பகுதி இருந்தநிலையில், இறுதி சீசனான 5-வது சீசனில் 10 பகுதிகள் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: