ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மரைக்கார் படத்துக்கு போட்டியாக துல்கர் சல்மான் படத்தை களமிறகும் நெட்பிளிக்ஸ்

மரைக்கார் படத்துக்கு போட்டியாக துல்கர் சல்மான் படத்தை களமிறகும் நெட்பிளிக்ஸ்

குருப் திரைப்படம்

குருப் திரைப்படம்

மரைக்கார் திரைப்படத்தை டிசம்பர் 17 அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடுகின்றனர். அதற்குப் போட்டியாக நெட்பிளிக்ஸ் அதே 17 ஆம் தேதி குருப் படத்தை வெளியிடுவதாக அறிவித்திருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

துல்கர் சல்மான் நடிப்பில் சென்ற மாதம் வெளியான படம் குருப். தமிழிலும் படத்தை வெளியிட்டனர். கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் வெளியான மலையாளப் படங்களில் முதல் பிளாக் பஸ்டர் ஹிட்டாக இந்தப் படம் அமைந்தது.

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பழமையான குற்றச் செயல்களில் ஒன்று சுகுமாரன் குருப் செய்த கொலை. இன்சூரன்ஸ் பணத்துக்காக வேறொருவரை கொலை செய்து, அதனை தன்னைப் போல் காட்டியவர் சுகுமாரன் குருப். அவர் என்னவானார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இதைப்பற்றி மலையாளத்தில் பல சினிமாக்கள் வந்துள்ளன. அதனை இந்தகால தொழில்நுட்பத்தில் குருப் என்ற பெயரில் எடுத்தனர்.

துல்கர் சல்மான் குருப்பாக நடித்திருக்கும் இந்தப் படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றிவாகை சூடியது. இந்த வருடம் கேரளாவில் அதிகம் வசூலித்த படமாகவும் இதுவே உள்ளது. குருப் படத்தை அனாயாசமாக தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட மரைக்கார் திரைப்படம் குருப்பின் முன்னால் தோல்வி கண்டுள்ளது.

Also read... தனுஷ் இணைந்து நடிக்க ஆசைப்படும் இந்தி நடிகர்

மரைக்கார் திரைப்படத்தை டிசம்பர் 17 அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடுகின்றனர். அதற்குப் போட்டியாக நெட்பிளிக்ஸ் அதே 17 ஆம் தேதி குருப் படத்தை வெளியிடுவதாக அறிவித்திருந்தது. இப்போது அதற்கு முன்பே படத்தை வெளியிட்டுள்ளது.

அத்துடன் தனது வாடிக்கையாளர் சந்தாவையும் கணிசமாக குறைத்துள்ளது நெட்பிளிக்ஸ். இதன் காரணமாக மற்ற ஓடிடி தளங்களுக்கு கடும் நெருக்கடியை நெட்பிளிக்ஸ் கொடுத்துள்ளது. மரைக்காரின் ஓடிடி பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் இது பாதிக்க வாய்ப்பு உள்ளது.

First published:

Tags: Netflix