வெப் தொடர்கள், திரைப்படங்களில் ஹாலிவுட்டுக்கே கண்ணாமூச்சி காட்டுகிறது தென்கொரியா. அங்கு தயாராகும் திரைப்படங்கள், வெப் தொடர்களை உலகம் முழுவதும் விரும்பிப் பார்க்கிறார்கள்.
நெட்பிளிக்ஸ் இந்த வருடம் முதல் கட்டமாக 25 தென்கொரிய வெப் தொடர், திரைப்படங்களை வெளியிடுகிறது.
வெப் தொடர்கள், திரைப்படங்களில் ஹாலிவுட்டுக்கே கண்ணாமூச்சி காட்டுகிறது தென்கொரியா. அங்கு தயாராகும் திரைப்படங்கள், வெப் தொடர்களை உலகம் முழுவதும் விரும்பிப் பார்க்கிறார்கள். சென்ற வருடம் வெளியான ஸ்குயிட் கேம் மணி ஹெய்ஸ்ட் உள்பட படா ஜாம்பவான்களை வாரிச்சுருட்டி முதலிடம் பெற்றது. 94 நாடுகளில் அந்த வெப் தொடர் முதலிடத்தைப் பிடித்தது. இதுவரை வெளியான வெப் தொடர்களில் நெட்பிளிக்ஸுக்கு அதிகம் லாபத்தை தந்ததும் அந்தத் தொடரே.
ஸ்குயிட் கேம் வெளியாகி இரு மாதங்கள் கழித்து ஹெல்பவுண்ட் வெப் தொடரை வெளியிட்டனர். இதுவும் தென்கொரியாதான். ப்ரீமியர் ஒளிபரப்பிலேயே 43.48 மில்லியன் மணி நேரம் இந்தத் தொடர் பார்க்கப்பட்டது. 93 நாடுகளில் நெட்பிளிக்ஸ் டாப் 10 இல் முதலிடம் பிடித்தது. 38 நாடுகளில் அனைத்து ஓடிடி தளத்திலும் சேர்த்து முதலிடம் பிடித்தது. அதையடுத்து வெளியான தி சைலன்ட் ஸீ தொடரும் நல்ல வரவேற்பை பெற்றது.
தென்கொரிய திரைப்படங்கள், தொடர்களுக்கு வரவேற்பு அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு சென்ற வருடம் அமேசான் பிரைம் வீடியோ நிறைய தென்கொரிய திரைப்படங்கள், தொடர்களை தனது தளத்தில் வெளியிட்டது. நெட்பிளிக்ஸ் 2016 முதல் 2021 வரை 130 படைப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த வருடம் முதல்கட்டமாக 25 புதிய படைப்புகளை வெளியிடுகிறது. இதில் திரைப்படங்கள், வெப் தொடர்கள் அடக்கம். இதுவரை நெட்பிளிக்ஸ் இப்படி அதிக எண்ணிக்கையில் கொரிய படைப்புகளை வெளியிட்டதில்லை.
ஓடிடியிலும் கொரிய படைப்புகளின் படையெடுப்பு தொடங்கிவிட்டதையே இது காட்டுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.