கோயிலில் முத்தமிடும் காதலர்கள் - நெட்ஃபிளிக்ஸில் வெளியான வெப் சீரிஸ்க்கு எதிர்ப்பு

எ சூட்டபிள் பாய் வெப் சீரிஸ் காட்சி

‘எ சூட்டபிள் பாய்’ என்ற வெப் சீரிஸ்க்கு எதிராக சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

  • Share this:
விக்ரம் சேத் எழுதிய நாவல் தான் ‘எ சூட்டபிள் பாய்’. இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே டைட்டில் உடன் வெப் சீரிஸை மீரா நாயர் இயக்கியுள்ளார். இஷான் கட்டர், தபு, தன்யா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இத்தொடர் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தொடரில் இஸ்லாமிய இளைஞர் இந்து பெண்ணை கோவிலில் வைத்து முத்தமிடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தக் காட்சி மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாகக் கூறி பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து நெட்ஃபிளிக்ஸ் தளத்தை புறக்கணிப்போம் என்பதாகக் கூறி #BanNetflix, #boycottnetflix ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளன.

மத்திய பிரதேசம் மகேஷ்வர் நகரில் உள்ள கோயிலில் முத்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளதால் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தயாரிப்பாளர் சங்கத் தலைவரானார் முரளி - டி.ராஜேந்தர் தோல்வி..


அதேவேளையில் இந்த வெப் சீரிஸை உருவாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: