நேர்கொண்ட பார்வை: முக்கிய நபருக்கு லீவு விட்ட யுவன்!

Web Desk | news18
Updated: August 7, 2019, 7:39 PM IST
நேர்கொண்ட பார்வை: முக்கிய நபருக்கு லீவு விட்ட யுவன்!
யுவன் சங்கர்ராஜா | அஜித்
Web Desk | news18
Updated: August 7, 2019, 7:39 PM IST
நேர்கொண்ட பார்வை படம் நாளை வெளியாகும் நிலையில், தனக்கு விடுமுறை வழங்குமாறு தயாரிப்பாளர்களுக்கு பிரபல நடிகர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை பலத்த எதிர்பார்ப்புகளுடன் நாளை வெளியாகிறது. இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தைப் பார்த்த திரைத்துறையினரும், விமர்சகர்களும் வெகுவாக பாராட்டியுள்ளனர். உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் அஜித், இந்தக் கதையை ஏற்று நடித்திருப்பதற்காகவும் பாராட்டுகள் குவிகின்றன.


இந்நிலையில் அஜித் படம் பார்க்க தனக்கு விடுமுறை அளிக்குமாறு மெட்ரோ படத்தின் நாயகன் சிரிஷ் சரவணன், தான் நடித்துவரும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு சமூகவலைதளங்களின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான யுவன்சங்கர் ராஜா, “கண்டிப்பா சார்” என்று பதிலளித்துள்ளார்.நடிகர் சிரிஷ் சரவணன் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதோடு, நாளைய தினம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் நிறைந்த தினமாக இருக்கும் என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.

வீடியோ பார்க்க: காதல் மன்னன் அஜித் வளர்ந்த கதை

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...