அஜித்தின் பைக் வீலிங்.. அதிரடி சண்டைக் காட்சிகள்... நேர்கொண்ட பார்வை படத்தின் மேக்கிங் வீடியோ

Web Desk | news18-tamil
Updated: August 24, 2019, 9:06 PM IST
அஜித்தின் பைக் வீலிங்.. அதிரடி சண்டைக் காட்சிகள்... நேர்கொண்ட பார்வை படத்தின் மேக்கிங் வீடியோ
சண்டை காட்சியில் நடிக்கும் அஜித்
Web Desk | news18-tamil
Updated: August 24, 2019, 9:06 PM IST
அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் அதிரடியான சண்டை காட்சிகளின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அஜித் குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் கடந்த 8-ம் தேதி திரைக்கு வந்த படம் நேர்கொண்ட பார்வை. அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். அபிராமி வெங்கடாச்சலம், நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆன்ட்ரியா தரங் ஆகிய 3 பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

போனி கபூர் தயாரிப்பில், யுவன்சங்கர் ராஜா இசையில் வெளியான இந்தப் படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சமீபத்தில் படத்தைப் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் அஜித்தையும், இயக்குனர் வினோத்தையும் பாராட்டி வருகின்றனர்.


நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி இரண்டு வாரம் கழித்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தில் அஜித்தின் அதிரடியான சண்டைக்காட்சியின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.இந்த மேக்கிங் வீடியோவில் பார்க்கில் அஜித் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த மேக்கிங் வீடியோவில் பைக் வீலிங் , ஆக்ரேஷமாக சண்டையிடும் காட்சிகளில் அஜித்தின் சிறப்பாக நடித்திருப்பார்.

Loading...

Also Watch

First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...