‘நேர்கொண்ட பார்வை’ ட்ரெய்லர் அறிவிப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி

news18
Updated: June 12, 2019, 12:21 PM IST
‘நேர்கொண்ட பார்வை’ ட்ரெய்லர் அறிவிப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி
நேர்கொண்ட பார்வை
news18
Updated: June 12, 2019, 12:21 PM IST
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

அஜித் வழக்கறிஞராக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படம் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு தமிழில் முதல் படமாகும். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.



படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்த படக்குழு, ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Loading...
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் இதை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.





வீடியோ பார்க்க: என்னை எதிர்த்தவர்கள் எல்லாரும் விஷாலுக்கு எதிராக மாறிவிட்டார்கள் - ராதாரவி

First published: June 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...