நேர்கொண்ட பார்வை: யுவன் இசையில் மிரட்டும் ‘தீ முகம்தான்’ - ரசிகர்கள் உற்சாகம்

இந்தநிலையில் இன்று, ‘தீ முகம்தான்’ என்ற பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. பா.விஜய் எழுதியிருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

news18
Updated: July 20, 2019, 6:26 PM IST
நேர்கொண்ட பார்வை: யுவன் இசையில் மிரட்டும் ‘தீ முகம்தான்’ - ரசிகர்கள் உற்சாகம்
நேர்கொண்ட பார்வை
news18
Updated: July 20, 2019, 6:26 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள ‘தீ முகம்தான்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தநிலையில் இன்று, ‘தீ முகம்தான்’ என்ற பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. பா.விஜய் எழுதியிருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. வழக்கம்போல  யுவன் சங்கர் ராஜா அஜித்துக்கான ஸ்பெஷல் தீம் பாடலை ரசிகர்கள் கொண்டாடும் வண்ணம் இசையமைத்து அசத்தியுள்ளார்.

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...