தீ முகம் தான்...! அஜித்தின் நியூ லுக்குடன் ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்

Nerkonda Paarvai | நேர்கொண்ட பார்வை படத்துக்கு தணிக்கைக் குழுவில் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

news18
Updated: July 20, 2019, 11:52 AM IST
தீ முகம் தான்...! அஜித்தின் நியூ லுக்குடன் ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்
news18
Updated: July 20, 2019, 11:52 AM IST
நேர்கொண்ட பார்வை படத்தின் ‘தீ முகம் தான்’ என்ற பாடல் இன்று மாலை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், தீ முகம் தான் என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் அஜித் என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள். மேலும் அஜித் சமீபத்தில் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவையும் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.நேர்கொண்ட பார்வை படத்துக்கு தணிக்கைக் குழுவில் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க: மழை நீர் சேமிப்பு தொட்டிகளை முறையாக அமையுங்கள் - இயக்குநர் அமீர்

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...