நேர்கொண்ட பார்வை - ‘தல’ சொன்னது 100% சரி... கண்ணீர் வடித்த நடிகை!

சென்னை ரோகிணி திரையரங்கில் நேர்கொண்ட பார்வை படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

news18
Updated: August 8, 2019, 3:23 PM IST
நேர்கொண்ட பார்வை -  ‘தல’ சொன்னது 100% சரி... கண்ணீர் வடித்த நடிகை!
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்
news18
Updated: August 8, 2019, 3:23 PM IST
நேர்கொண்ட பார்வை படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கியுள்ளார். அமிதாப்பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது. அமிதாப்பச்சன் நடித்த வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தைப் பார்த்த விமர்சகர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.


இந்தப் படத்தின் முதல்நாள் முதல் காட்சியை சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் ட்விட்டரில் ரசிகர்களின் கொண்டாட்டம் குறித்தும் படம் குறித்தும் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், “தல ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவதைப் பார்த்து வியந்தேன். இதற்கு முன்னால் இப்படி ஒரு வரவேற்பை நான் பெற்றதில்லை. அஜித் சாருக்கு நன்றி. அவர் அணுகுவதற்கு சிறந்த மனிதர். மிகவும் உறுதுணையாக இருந்தார். அவர் இந்தப் படம் நம் அனைவரின் வாழ்க்கையை மாற்றும் என்று எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார். அவர் சொன்னது 100% உண்மையானது இன்று.Loading...
படத்தில் ஒவ்வொருவரின் நடிப்பும் அற்புதம். இந்த டீமில் நானும் இருப்பதில் மகிழ்ச்சி. வாய்ப்பளித்த இயக்குநர் ஹெச்.வினோத்துக்கு நன்றி. உங்கள் மீது எந்த கேள்வியுமின்றி நம்பிக்கை வைத்தேன். இந்தப் படம் என்னை மாற்றிவிட்டது. இதுபோன்ற உணர்வுப்பூர்வமாக படம் எடுப்பது சவாலான ஒன்று” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

வீடியோ பார்க்க: காதல் மன்னன் அஜித் வளர்ந்த கதை

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...