நேர்கொண்ட பார்வை படத்துக்காக புதிய தொழில்நுட்பம் - மாஸ் காட்டும் திரையரங்கம்!

news18
Updated: August 3, 2019, 1:58 PM IST
நேர்கொண்ட பார்வை படத்துக்காக புதிய தொழில்நுட்பம் - மாஸ் காட்டும் திரையரங்கம்!
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்
news18
Updated: August 3, 2019, 1:58 PM IST
இந்தியாவின் முதல் ஆர்ஜிபி மற்றும் லேசர் புரஜெக்டர் தொழில்நுட்பத்தில் நேர்கொண்ட பார்வை ரிலீசாக உள்ளது.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தப் படத்தில் வித்யாபாலன், ரங்கராஜ் பாண்டே, அபிராமி வெங்கடாச்சலம், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வருகிறது. அதனால் படத்துக்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


இன்று முதல் படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் உள்ள ஜிகே சினிமாஸ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் முதல் ஆர்ஜிபி லேசர் வசதிகொண்ட புரஜெக்டரை நேர்கொண்ட பார்வை படத்துக்காக நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அத்திரையரங்கின் நிர்வாக மேலாளர் ரூபன் மதிவாணன் தனது ட்விட்டர் பதிவில், “உலகின் மிகவும் பிரசித்த பெற்றதாக கருதப்படும் இந்த புரஜெக்டரில் துல்லியமான கலர் மற்றும் 3டி அனுபவங்கள் கிடைக்கும் என்றும், இந்த தொழில்நுட்பத்தில் படம் பார்ப்பது இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.வீடியோ பார்க்க: தல VS தளபதி! திரைக்குள் நிகழ்ந்த போர்

First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...