‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதி மாறுகிறதா?

வியாழக்கிழமை சென்டிமென்டை கடைபிடித்து வரும் அஜித் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுமாறு கூறியிருக்கிறாராம்.

news18
Updated: June 16, 2019, 3:43 PM IST
‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதி மாறுகிறதா?
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்
news18
Updated: June 16, 2019, 3:43 PM IST
‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன்.

மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நேர்கொண்ட பார்வை ட்ரெய்லர் காட்சி


இந்தப் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வழக்கமாக புதிய படங்கள் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வெளியாகி வரும் நிலையில் ஆகஸ்ட் 10-ம் தேதி சனிக்கிழமையில் வருகிறது.
Loading...
மேலும் வியாழக்கிழமை சென்டிமென்டை கடைபிடித்து வரும் அஜித் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுமாறு கூறியிருக்கிறாராம். இதனால் ஆகஸ்ட் 1-ம் தேதியே நேர்கொண்ட பார்வை படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை முடிந்ததும் அஜித் சொன்னது இதுமட்டும் தான் - வினோத் ஓபன் டாக்

வீடியோ பார்க்க: புளித்த மாவு... தாக்குதல்... நடந்தது என்ன? - எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்

First published: June 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...